பேன்டில் பெயிண்டை போல் உருக்கி தங்கத்தை கடத்திய நபர்! வசமாக சிக்கியது எப்படி? பரபரப்பு சம்பவம்
தங்கத்தை உருக்கி பேன்டில் தடவி கொண்டு வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பொதுவாக தங்க கடத்தலில் ஈடுபடுவர்கள் வித்தியாசமாக செயல்பட்டு சிக்கியதை பார்த்திருப்போம். அதிலும், கேரளாவில் விமான நிலையங்களில் தங்க கடத்தலில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது.
அதுவும் வினோதமான முறைகளில், ஹாலிவுட் சினிமா காட்சிகளை மிஞ்சிய அளவிற்கு தங்கக் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், கண்ணூர் விமான நிலையத்தில் சுமார் ரூ.14 லட்சம் மதிப்புள்ள தங்கம் சிக்கியுள்ளது.
தங்கத்தை கடத்தி வந்த நபர், சுமார் 302 கிராம் தங்கத்தை உருக்கி தனது பேண்டில் தடவியுள்ளார். மேலும், பயணிகள் விமானத்தில் இருந்து வெளிவரும் போது சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதித்துள்ளனர்.
அப்போது தான் அந்த நபரின் டபுள் லேயர் பேண்டில் 302 கிராம் அளவுள்ள தங்கம் பேஸ்ட் தடவியிருந்தது கண்டறியப்பட்டது. மேலும், பெயிண்ட் தான் அதில் உள்ளது என்று முதலில் மறுத்தவர் பின்னர் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்.
பேன்டில் இருந்த தங்கத்தை கைப்பற்றிய போலீசார், அதனை கடத்தி வந்த நபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.