கேரளாவில் எந்தெந்த உணவுகள் ஃபேமஸ் தெரியுமா? முழுவிபரம் இதோ
கேரளாவிற்கு சென்றால் நாம் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகளின் பட்டியலை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கேரளா
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் கேரளா மாநிலம் சுற்றுலா பயணிகளின் சிறந்த தெரிவாக இருக்கின்றது. மேலும் இங்கு படகு சவாரி, படகில் வசிப்பதற்கான மிதவை வீடு என பயணிகளை கவர்ந்து வருகின்றது.
மலைகள் அதிகமாக காணப்படும் இந்த மாநிலத்தினை ரசிப்பதற்காக சுற்றுலா பயணிகள் அதிகமாக படையெடுத்து வருகின்றனர். மேலும் இங்குள்ள மக்களின் உணவுகளும் சற்று வித்தியாசமாகவே இருக்கும்.
சத்தான மற்றும் சுவையான உணவுகளை அசத்தலான கை பக்குவத்தில் சமைத்து அசத்துகின்றனர். இந்நிலையில் கேரள மக்களின் பிரபலமான உணவுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கேளராவின் பிரபலமான உணவு
கேரளா சென்றால் மீன் பொளிச்சதை கட்டாயம் சாப்பிட வேண்டும். மசாலா தடவிய கறி மீனை வாழை இலையில் சுற்றிதருவார்கள்.
ஓணத்தில் முக்கிய உணவான இருப்பது அவியல் ஆகும். இதில் அனைத்து காய்கறிகளும் சேர்த்திருப்பதுடன், சத்தான உணவாகவும் பார்க்கப்படுகின்றது.

கேரளாவில் பெரும்பாலான வீடுகளில் காலை உணவாக புட்டு, கடலை கறி சாப்பிடுவது வழக்கமாகும். இந்த உணவு சுவையானதாகவும், ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் இருக்கின்றது.

நாடன் சிக்கன் கறி கேரளாவில் பிரபலமான பாரம்பிய சிக்கன் உணவாகும். இதனை பரோட்டா, இடியாப்பத்திற்கு ஏற்றதாக இருக்கின்றது.

அதே போன்று கேரளாவில் மலபார் பிரியாணி மிகவும் பிரபலம் ஆகும். ஆதலால் கேரளா சென்றால் மலபார் பிரியாணியை சாப்பிடாமல் மட்டும் வந்திடாதீங்க.

தேங்காய் பாலில் தயார் செய்யப்படும் அடை பிரதமன் கேரளாவில் உள்ள அனைத்து விழாக்களிலும் மிகவும் பிரபலமாகும். மிகவும் ருசியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்குமாம்.

மாலை நேர ஸ்நாக்ஸாக கேரளாவில் பழம் பொரி சாப்பிடுவது வழக்கமாம். அதாவது வாழைப்பழத்தில் செய்யப்படும் இந்த பழம்பொரி அட்டகாசமான சுவையில் இருக்கும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |