சித்திரை மாதத்தில் இந்த ராசிகள் தான் ராஜாக்கள் - உங்க ராசி என்ன?
ஜோதிட சாஸ்திரத்தின்படி இந்த சித்திரை மாதம் சில ராசிகள் மிகவும் செல்வந்தர்களாக வாழப்போகின்றனர் எனப்படுகின்றது. அந்த ராசிகள் யார் என்பதை பதிவில் பார்க்கலாம்.

சித்திரை மாத ராசி பலன்
ஜோதிட சாஸ்திரத்தில் சூரியன் மிக முக்கிய கிரகமாக பார்க்கப்படுகின்றார். இவருடைய மாற்றம் பல ராசிகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். ஏப்ரல் 14, தமிழ் புத்தாண்டான நேற்று சூரியன் மேஷ ராசிக்கு இடம்பெயர்ந்தார். இந்த பெயர்ச்சி12 ராசிகளுக்கும் நல்லின்ாத்தை கொடுக்கும்.
மேஷ ராசி தான் சூரியன் உச்சம் பெறும் ராசி எனப்படுகின்றது. இந்த ராசி ஜோதிடத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த ராசி எனப்படுகின்றது.
மேலும் மேஷ ராசியின் அதிபதி கிரகங்களின் தளபதியான செவ்வாய். ஜோதிட சாஸ்திரத்தில் சூரியனும், செவ்வாயும் நட்பு கிரகங்களாகும்.
இந்த நிலையில் சில ராசிக்காரர்கள் சித்திரை மாதத்தில் அபரிமிதமான நன்மைகளை அனுபவிக்கப் போகிறார்கள். அந்த ராசிகள் பற்றி பார்க்கலாம்.

மேஷம்
- தமிழ் புத்தாண்டு அன்று சூரியன் மேஷ ராசியின் முதல் வீட்டில் சஞ்சரிக்கவுள்ளார்.இதனால் இந்த மாதம் இவர்கனுக்கு சிறப்பான மாதமாக இருக்கும். எடுக்கும் காரியத்தில் வெற்றி நிச்சயம். முயற்ச்சி செய்தால் வெற்றி நிச்சயம். உங்களை விட உயர் அதிகாரத்தில் இருந்து வந்தவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். உங்கள் கடந்த கால வேலைகள் தற்போது சிறப்பு பெறும்.
மிதுனம்
- மேஷ ராசியில் சூரியனின் உச்ச சஞ்சாரம் அவர்களின் பதினொன்றாம் வீட்டில் நடைபெறுகிறது. இது நிதி ஆதாயங்கள், தொழில்முறை அங்கீகாரம் மற்றும் நீண்ட கால ஆசைகளை நிறைவேம். இந்த காலத்தில் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் ஆதரவளிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகும். பணத்திற்கு பஞ்சம் வராது. உந்த காரியமும் உங்கள் பக்கம் வரும்.
தனுசு
- தனுசு ராசிக்காரர்களுக்கு சூரியனின் இந்த ராசி மாற்றம் அவர்களின் ஐந்தாம் வீட்டை செயல்படுத்துகிறது. இந்த கிரக மாற்றம் படைப்பாற்றல், உற்சாகம் போன்றவற்றை கொடுக்கும். இந்த ஆற்றல்மிக்க காலகட்டம், அவர்கள் திறமைகளை நம்பிக்கையுடன் வெளிப்படுத்தும். முன்னேற்றங்களைக் கொடுக்கும் முயற்சிகளை நீங்கள் தொடர இந்த காலகட்டம் உங்களை தூண்டும். வேலையில் இருப்பவர்கள் இருவரும் தங்கள் துறைகளில் பெரிய வெற்றிகளைப் பெறலாம். நீங்கள் நேரத்தில் முதலீடுகள் மூலம் பெரும் லாபம் ஈட்ட வாய்ப்புள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).