லாட்டரியில் 25 கோடியை தட்டித் தூக்கிய ஆட்டோ டிரைவர்! தற்போது இவரது நிலை என்ன தெரியுமா?
கேரளாவில் லாட்டரி மூலம் 25 கோடிக்கு சொந்தக்காரரான ஆட்டோ டிரைவரின் தற்போதைய நிலை என்ன என்பது வெளிவந்துள்ளது.
கேரளா இளைஞர்
கேரளாவைச் சேர்ந்த அனூப் என்ற ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு கடந்த ஆண்டு லாட்டரி மூலம் பரிசுத்தொகை ரூ25 கோடி விழுந்துள்ளது. மேலும் இந்த லாட்டரியை மகன் சேர்த்து வைத்த உண்டியல் பணத்தில் வாங்கிய நிலையில் அது அதிஷ்டமாக மாறியது.
குடும்ப சூழ்நிலை காரணமாக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்த நிலையிலேயே இந்த அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. இந்திய அளவில் பிரபலமான அனூப்பிற்கு மகிழ்ச்சியை அனுபவிக்க முடியாமல் சிறிது நாளிலே தொல்லையாக மாறியுள்ளது.
ஆம் லாட்டரி விழுந்ததால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவி கேட்டு வீட்டிற்கு வர ஆரம்பித்த நிலையில், சொந்த வீட்டிற்கு வரமுடியாத நிலையில் இருப்பதாக சமீபத்தில் காணொளி வெளியிட்டிருந்தார்.
தற்போதைய நிலை என்ன?
அனூப் வேதனையுடன் வெளியிட்ட காணொளி மேலும் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையல், அதன் பின்பு அவரை பற்றிய தகவல் ஒன்றும் வெளியாகவில்லை.
தற்போது அனூப் திருவனந்தபுரம் மணக்காடு ரயில் நிலையத்தில் லாட்டரி விற்பனை செய்ய தொடங்கியுள்ளதாகவும், இந்த பம்பர் பரிசு கிடைத்த பின்பும் லாட்டரியில் அனூப்பிற்கு ஐந்தாயிரம் வரை பரிசு கிடைத்துள்ளதாம்.
மேலும் லாட்டரி பரிசு பெற்றவர் என்பதால் இவர் அதிர்ஷ்டகாரர் என்று பலரும் இவரிடம் லாட்டரி வாங்கி செல்வதாக கூறப்படுகின்றது. தற்போது ஏஜென்டிடம் வாங்கியே லாட்டரி விற்கும் அனூப், ஏஜென்டாகவே மாறவும் திட்டமிட்டுள்ளாராம்.
அனூப்பின் மனைவி கூறுகையில், லாட்டரி வாங்கி அதில் பரிசு விழுந்தால் அதனை யாரிடமும் சொல்லாமல் கவனமாக செலவு செய்யுங்கள்.. உங்கள் பெயர் வெளியே வராதவாறு கவனமாக இருங்கள் என்று தெரிவித்துள்ளார்.