Wow... கடனுக்கு லாட்டரி சீட்டு வாங்கிய கூலி தொழிலாளி- அடித்தது ஜாக்பாட்
கேரளாவில் கடனுக்கு லாட்டரி சீட்டு வாங்கிய கூலி தொழிலாளிக்கு ரூ.75 லட்சம் பணம் அடித்துள்ளது.
லாட்டரி சீட்டு வாங்கிய கூலி தொழிலாளி
கேரள மாநிலம், குளத்தூர் பகுதியை சேர்ந்தவர் பாபுலால் (55), இவர் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இதனையடுத்து, அந்தப் பகுதியில் பெண் ஒருவர் ஒவ்வொரு நாளும் லாட்டரி சீட்டு விற்பனை செய்ய வருவது வழக்கம்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், இப்பெண்ணிடம் அங்கு சுமை தூக்கும் தொழிலாளி பாபுலால் வந்தார்.
அப்போது, பாபுலாலிடம் 2 லாட்டரி சீட்டு வாங்கும்படி அந்தப் பெண் கேட்டுள்ளார். அதற்கு பாபுலால் என்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார்.
அதற்கு அப்பெண், முதலில் லாட்டரி சீட்டு வாங்கிக்கொள்ளுங்கள். பின் அந்தப் பணத்தை எனக்கு கொடுங்கள் என்று கூறியதும், பாபுலால் அப்பெண்ணிடம் கடனுக்கு லாட்டரி சீட்டு வாங்கியுள்ளார்.
கடனாக வாங்கிய லாட்டரி சீட்டின் குலுக்கல் நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது, முதல் பரிசான ரூ.75 லட்சம் சுமை தூக்கும் தொழிலாளி பாபுலால் சீட்டுக்கு விழுந்தது. இத்தகவலை கேட்டு பாபுலால் மகிழ்ச்சியில் துள்ளிகுதித்தார்.
இது குறித்து பாபுலால் பேசுகையில், இந்தப் பணத்தை கொண்டு என் கடனைகளை அடைத்து, என் குடும்பத்தை காப்பாற்றுவேன் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.