பாடகி கெனிஷா ஃபிரான்சிஸ் இலங்கையில்: சர்ச்சைக்கு மத்தியில் கூலாக செய்த செயல்
பாடகி கெனிஷா ஃபிரான்சிஸ் மற்றும் நடிகர் ரவி மோகன் இலங்கை வந்துள்ள புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் வெளியாகி இணையத்தில் புதிய புயலை கிளப்பி வருகின்றது.
இந்நிலையில் கூலாக இலங்கை உணவை ருசித்து சாப்பிட்டு பாடகி கெனிஷா ஃபிரான்சிஸ் பகிர்துள்ள புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகின்றது.
கெனிஷா ஃபிரான்சிஸ்
தமிழ் சினிமாவை தாண்டி தென்னிந்திய சினிமாவில் அதிகளவில் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக இருப்பது தான் நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி ரவி விவாகரத்து விவகாரம்.
இவர்களின் விவாகரத்து பிரச்சனையில் முக்கிய காரணமாக இருப்பது பாடகி கெனிஷா ஃபிரான்சிஸ் என்று கூறப்பட்ட நிலையில், ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில், ரவி மோகன், கெனிஷாவுடன் கைக்கோர்த்தபடி ஜோடியாக வந்தமையால் பெரும் சர்ச்சை கிளம்பியது.
இந்த சர்சை இன்னும் முடிவடையாத நிலையில், பாடகி கெனிஷா பிரான்சிஸ் அண்மையில் "அன்றும் இன்றும்" என தலைப்பிடப்பட்ட ஆல்பம் பாடலை வெளியிட்டிருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
தற்போது "அன்றும் இன்றும்" ஆல்பம் பாடலின் புரோமோஷனனுக்காக இலங்கை வந்துள்ள கெனிஷா ஃபிரான்சிஸ் நடிகர் ரவிமோகனுடன் வந்திருப்பது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் கெனிஷா ஃபிரான்சிஸ் இலங்கையில் பல இடங்களுக்கு சென்று புகைப்படங்களை வெளியிட்டுள்ளதுடன், இலங்கை கலாசார உணவுகளுக்கு பிரசித்தி பெற்ற Nelum Kola உணவகத்தில் உணவருந்திய காணொளியை தனது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்துள்ளார். குறித்த விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.





