கெனிஷாவுடன் டூருக்கு கிளம்பிய ரவிமோகன்.. மீண்டும் கிளம்பும் சர்ச்சை
பெண் தோழி கெனிஷாவுடன் நடிகர் ஜெயம் ரவி இலங்கை வந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
ரவி மோகன்
தமிழ் சினிமாவில் ஜெயம் திரைப்படத்தின் மூலமாக பிரபலமானாவர் தான் நடிகர் ரவி மோகன்.
இந்த திரைப்பட வெற்றிக்கு பின்னர், ரவி தன்னுடைய பெயரை ஜெயம் ரவி என மாற்றிக் கொண்டார். ஆனால் சில மாதங்களுக்கு முன்னர் ரவி மோகன் என்று பெயர் மாற்றம் செய்திருந்தார்.
கடந்த வருடம் அவருடைய குடும்ப பிரச்சினைகள் ஊடகங்களுக்கு வர ஆரம்பித்தது.
அதாவது காதலித்து திருமணம் செய்த ஆர்த்தி விவாகரத்து செய்யப் போவதாகவும், குடும்பத்திற்குள் ஏகப்பட்ட பிரச்சினைகள் நடப்பதாகவும் அறிக்கையொன்றை பகிர்ந்தார். அன்று முதல் இன்று வரை சமூக வலைத்தளங்களில் ரவிமோகன் பற்றிய செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது.
ரவிமோகனுடன் இலங்கை வந்த கெனிஷா
இந்த நிலையில், கடந்த மாதம் தன்னுடைய பெண் தோழியான கெனிஷாவுடன் கோயிலுக்கு சென்ற புகைப்படங்கள் வெளியாகியன.
இதனை தொடர்ந்து இன்றைய தினம் ரவி மோகன் புதியதாக ஸ்டுடியோ ஒன்றை துவங்கியுள்ளாராம். இது தொடர்பாக அவருடைய சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
இப்படி அடுத்தடுத்து நல்ல விடயங்களில் கவனம் செலுத்தும் ரவிமோகன், இன்றைய தினம் தன்னுடைய பெண் தோழியான கெனிஷாவுடன் இலங்கை வந்துள்ளார்.
இலங்கையில் உள்ள அரசியல்வாதி ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அத்துடன் கெனிஷா அவருடைய சமூக வலைத்தளப்பக்கங்களில் இலங்கை வந்த காணொளியொன்றையும் பகிர்ந்துள்ளார்.
சர்ச்சை முடிந்து விட்டது என எதிர்பார்த்த வேளையில், இந்த பயணம் இணையவாசிகள் மத்தியில் சர்ச்சையை மீண்டும் கிளப்பியுள்ளது.




