Keerthy Suresh : வெள்ளை நிற புடவையின் ரசிகர்களை கிறங்கடிக்கும் கீர்த்தி சுரேஷ்... குவியும் லைக்குகள்
Keerthy Suresh Salary : நடிகை கீர்த்தி சுரேஷ் டோரதி பட புரொமோஷன் வேலைகளில் பிஸியாக ஈடுபட்டு வரும் நிலையில் அண்மையில் ஒரு நிகழ்ச்சிக்கு ட்ரெண்டிங்கான வெள்ளை நிற புடவையில் சென்றிருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறித்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
நடிகை கீர்த்தி சுரோஷ்
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் கீர்த்தி சுரேஷ், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார்.

தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் 'ரவுடி ஜனார்த்தனா' திரைப்படத்திலும், இயக்குநர் அனில் ரவிபுடி இயக்கும் மற்றொரு படத்திலும் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதனால், அவரது கைவசம் அடுத்தடுத்த பெரிய படங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

சமீப காலமாக முன்னணி நடிகைகள் திரைப்படங்களில் சிறப்பு பாடல்களுக்கு நடனமாடுவது ஒரு புதிய டிரெண்டாக மாறியுள்ளது. சமீபத்தில் வெளியான 'பெத்தி' திரைப்படத்தில் ஸ்ருதி ஹாசன் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார்.

அதற்கு முன்பு தமன்னாவின் காவாலா பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. 'புஷ்பா' திரைப்படத்தில் சமந்தா ஆடிய சிறப்பு பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று நாடு முழுவதும் பேசப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக கீர்த்தி சுரேஷும் தெலுங்கு சினிமா நடிகர் நானியின் தி பாரடைஸ் படத்தில் குத்தாட்டம் போட்டுள்ள பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

அதனை தொடர்ந்து விரைவில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் டோரதி என்ற படம் வெளியாக உள்ளது. பட வேலைகளை தாண்டி டோரதி பட புரொமோஷன் வேலைகளில் பிஸியாக ஈடுப்பட்டு வருகின்றார்.
இந்நிலையில், அண்மையில் ஒரு நிகழ்ச்சிக்காக நடிகை கீர்த்தி சுரேஷ் வெள்ளை நிற புடவையில் லட்சணமாக தோன்றியுள்ளார். குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |