மணப்பெண் லுக்கில் அசத்தும் தொகுப்பாளினி டிடி... வைரலாகும் புகைப்படங்கள்!
anchor dd latest saree photoshoot : பிரபல தொகுப்பாளினி டிடி, அழகிய பச்சைநிற புடவையில் மணப்பெண் அழங்காரத்துடன் அசத்தலாக போஸ் கொடுத்து தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
தொகுப்பாளினி டிடி
தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வரும் டிடி, தனது கலகலப்பான பேச்சு மற்றும் இயல்பான அணுகுமுறையால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

சின்னத்திரை மட்டுமின்றி ‘விசில்’, ‘பவர் பாண்டி’, ‘சர்வம் தாளமயம்’, ‘காபி வித் காதல்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இவரது திருமண வாழ்க்கை விவாகரத்தில்முடிந்தாலும் பல பெண்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக தன் திறைமையால் சாதித்து வருகின்றார்.

சில காலம் உடல்நல குறைப்பாட்டால் அவதிப்பட்டுவந்தார். முட்டிக்கால் அருவைசிகிச்சையின் பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகம் தோன்றாத டிடி, அடிக்கடி தனது சமூக ஊடகங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

இந்நிலையில் அழகிய பச்சைநிற சேலையில், ரசிகர்களை கவரும் வகையில் அசத்தலான போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை அள்ளிவருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |