நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்து வளர்ந்த வீடா இது? பலரும் பார்த்திடாத காட்சிகள்
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது பிறந்த வீடு பலரும் அறிந்திடாத நிலையில், தற்போது புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
கீர்த்தி சுரேஷ்
2003ம் ஆண்டு மலையாளத்தில் கீதாஞ்சலி என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். பின் தமிழ், தெலுங்கு என பிஸியாக பல மொழிகளில் நடித்து வருகிறார்.
ஆரம்பத்தில் கொண்டாடப்பட்ட கீர்த்தி சுரேஷ் இடையில் ரசிகர்களால் அதிகம் கலாய்க்கப்பட்டார், ஆனால் அதை நினைத்து கவலைப்படாமல் தனது பணியை செய்துவந்தார்.
அப்போது அவர் நடிப்பை வெளிப்படுத்த கிடைத்த ஒரு படம் தான் மகாநதி, இதில் பழம்பெறும் நடிகை சாவித்ரியாக நடித்து தேசிய விருது எல்லாம் பெற்றார். அதன்பின் சாணி காகிதம் படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்து மக்களால் கவனிக்கப்பட்டார்.
பூர்வீக வீடு
நடிகை கீர்த்தி சுரேஷ் இன்ஸ்டா பக்கத்தில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் ஒரு பிரபலம். இவர் தனது இன்ஸ்டாவில் சிறுவயதில் தான் வாழ்ந்த பூர்வீக வீட்டின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
நேற்றைய தினம் நிரூபர் கேட்ட கேள்விக்கு நக்கலாக பதில் அளித்துள்ள கீர்த்தி சுரேஷின், கிளாமர் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றது.