திருமணத்தின் பின்னரும் இப்படியா? புது லுக்கில் ரசிகர்களை கிறங்கடிக்கும் கீர்த்தி சுரேஷ்!
நடிகை கீர்த்தி சுரேஷ் செம கிளாஸியான உடையில் ஹொட் போஸ் கொடுத்து தங்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை அள்ளிவருகின்றது.
நடிகை கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருக்கும் வாரிசு நடிகர்களில் ஒருவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவரான இவருடன் நடிக்க பல முன்னணி நடிகர்கள் ஆவலாக இருக்கும் நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் திடீர் என தன்னுடைய திருமண தகவலை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
இது என்ன மாயம் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் சிவகார்திகேயகனுக்கு ஜோடியாக ரஜினிமுருகன் படத்தில் நடித்தார்.
ஆனால் இது என்ன மாயம் படத்துக்கு முன்னரே ரஜினிமுருகன் வெளியானது. இதன் பின்னர் ரெமோ, பைரவா, சாமி - 2, அண்ணாத்த, சர்கார் போன்ற படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.
தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் நடிகை கீர்த்திக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தெலுங்கிலும் தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகின்ற கீர்த்தி அண்மையில் ஹிந்தியிலும் அறிமுகமாகியுள்ளார்.
இந்நிலையில் திருமணத்தின் பின்னரும் நடிப்பில் அதிக ஆர்வம் காட்டிவரும் கீர்த்தி சுரேஷ் ட்ரெண்டிங் உடையில் செம கிளாமராக ரசிகர்களை ஈர்க்கும் வகையில் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |