புதிய தோற்றத்தில் களமிறங்கிய ரெஜினா கசாண்ட்ரா! வைரலாகும் புகைப்படங்கள்
நடிகை ரெஜினா கசாண்ட்ரா ட்ரெண்டிங் உடையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களால் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
ரெஜினா கசாண்ட்ரா
ரெஜினா கசாண்ட்ரா மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்குள் வந்தவர் தான் நடிகை ரெஜினா கசாண்ட்ரா. தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார்.
‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இவர், அதனை தொடர்ந்து மாநகரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
ஹிந்தியில் சோனம் கபூருடன் இவர் இணைந்து நடித்த ‘ஏக் லட்கி கோ தேகோ தோ ஐசா லகா’ திரைப்படத்தில் நடித்திருந்தார். குறித்த திரைப்படம் ஓரினச்சேர்க்கை கதையை மையப்படுத்தி இருந்தமையால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுவரையில் எந்த ஒரு நடிகர்களுடன் கிசுகிசுவில் சிக்காமல் இருந்துவந்த ரெஜினா, அண்மையில் ஏகப்பட்ட ‘ரிலேஷன்ஷிப்’பில் இருந்ததாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இணையத்தில் புதிய புயலை கிளப்பினார்.
தற்போது அவரது கரியரில் உச்சபட்சமாக அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
சினிமாவில் பிஸியா இருந்தாலும் சமூக வளைத்தளங்களிலும் ஆர்வம் காட்டிவரும் ரெஜினா அவ்வப்போது வித்தியாசமான உடைகளில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விப்பது வழக்கம்.
இந்நிலையில் ரெஜினா கசாண்ட்ரா புதிய தோற்றத்தில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |