சமந்தாவுக்கு கோவில் கட்டிய நபர்... வெறித்தனமான ரசிகரா இருக்காரே!
நடிகை சமந்தாவுக்கு ஆந்திராவில் Bapatla என்னும் இடத்தில இருக்கும் Alapadu கிராமத்தில் ரசிகர் ஒருவர் கோவில் கட்டியுள்ளார். நேற்று சமந்தாவின் பிறந்தநாள் என்பதால் அந்த கோவிலை அவர் நேற்றைய தினம் திறந்து வைத்துள்ள காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
நடிகை சமந்தா
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி திரையுலகில் ஃபேமஸானவர் சமந்தா. தமிழில் அவர் தனது திரைப் பயணத்தை தொடங்கினார்.
பிறகு தெலுங்கிலும் நடிக்க ஆரம்பித்தார். இந்த இரண்டு மொழிகளிலுமே அவர் தனது திறமையை நிரூபித்ததன் காரணமாக அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது.
தெலுங்கில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ரீமேக்கில் நடித்தபோது நாக சைதன்யாவை காதலித்தார். இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2017ஆம் ஆண்டு கோவாவில் அவர்களது திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது.
திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து நடிப்பில் தீவிரம் காட்டி வந்தார் சமந்தா. ஆனால் திடீரென கடந்த 2021ஆம் ஆண்டு நாங்கள் இருவரும் பிரிகிறோம் என்று நாக சைதன்யாவும், சமந்தாவும் சமூக வலைதளத்தில் அறிவித்தனர்.
அதன் பின்னர் நடிகை சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டார். அதனால், சினிமாவிலிருந்து தற்காலிகமாக விலகுகிறேன் என அறிவித்துவிட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டார்.
பின்னர் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லுதல், தியானம் மற்றும் யோகா பயிற்சி என சிறிது காலம் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.
நடிகை சமந்தா தற்போது வருண் தவானுடன் இணைந்து சிட்டாடலின் இந்திய ரீமேக்கான சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைத்தன்யாவுக்கும் நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் கடந்த வருட இறுதியில் திருமணம் நடிந்து முடிந்தது.
கடினமான சூழ்நிலைகளையும் அமைதியாக சிரிப்புடன் கடந்து செல்லும் இவரின் பக்குவத்தை பார்த்து இவரின் ரசிகர் கூட்டம் பெருகிக்கொண்டே போகின்றது. இந்நிலையில் அவர் நேற்று தனது 38ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.
அதனையொட்டி அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்தார். ரசிகர்களும் தங்கள் பங்குக்கு வாழ்த்து சொன்னார்கள். ஆனால் ஆந்திராவை சேர்ந்த ரசிகர் ஒருவர் சமந்தாவுக்காக கோயில் கட்டியிருக்கிறார்.
ஆந்திர மாவட்டம் பாபட்லா மாவட்டத்தை சேர்ந்த சந்தீப் என்பவர்தான் இதனை செய்திருக்கிறார். குறித்த தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
A fan named #Sandeep built a temple for actress #Samantha in Bapatla.@Samanthaprabhu2 pic.twitter.com/Z5Zat1vhhE
— Milagro Movies (@MilagroMovies) April 28, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |