கிராமத்து ஸ்டைல் மாறாமல் கருப்பட்டி பணியாரம்....
Traditional Karupatti Paniyaram: நாகர்கோவில் ஸ்பெஷல் கருப்பட்டி பணியாரம் எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
குழந்தைகள் உள்ள வீடுகளில் மாலை நேரத்தில் கண்டிப்பாக ஏதாவது ஸ்நாக்ஸ் செய்து கொடுப்பது வழக்கமாக இருக்கும். அதிலும் குழந்தைகளுக்கு பிடித்த மாதிரியாகவும் இருக்க வேண்டும்.
மேலும் உடலுக்கு ஆரோக்கியமானதாக இருப்பது மிகவும் முக்கியம் ஆகும். அந்த வகையில் கருப்பட்டி உடலை வலுப்படுத்துவதற்கு உதவுகின்றது.

தற்போது கருப்பட்டியைக் கொண்டு பல இனிப்புகளை செய்து வருகின்றனர். முக்கியமாக கருப்பட்டியில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இதனால் ரத்த சோகை பிரச்சனைக்கு தீரவு கொடுக்கின்றது.
ஆனால் குழந்தைகள் அதிகமாக கருப்பட்டியை விரும்பி சாப்பிட மாட்டார்கள் தற்போது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் கருப்பட்டியில் பணியாரம் செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி - 2 கப்
கருப்பட்டி - 2 கப்
தண்ணீர் - 1/2 கப்
எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை
பணியாரம் செய்வதற்கு முதலில் பச்சரியை நன்றாக கழுவி 2 மணி நேரம் ஊற வைத்து, பின்பு காட்டன் துணியில் 15 நிமிடம் காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்பு மிக்ஸி ஜாரில் அரிசியை சேர்த்து பவுடராக அரைத்து, அதனை சல்லடையில் போட்டு சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

சலித்த மாவை ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் கருப்பட்டியை நன்றாக தூளாக்கி அதில் அரை கப் தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
கருப்பட்டி தண்ணீரை ஏற்கனவே சலித்து வைத்துள்ள மாவில் கொஞ்ம் கொஞ்சமாக சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். மீதமுள்ள கருப்பட்டி தண்ணீரை அப்படியே வைக்கவும்.
குறித்த கலவையை 6 மணிநேரம் அல்லது இரவு முழுவதும் புளிக்க வைத்துக் கொள்ளவும். உடனே பணியாரம் சுட நினைத்தால் 2 சிட்டிகை அளவு ஆப்ப சோடாவை கலந்து பணியாரம் செய்யலாம்.
ஆனால் நீங்கள் பாரம்பரிய சுவையில் சாப்பிட நினைத்தால் மாவை புளிக்க வைப்பது சிறந்தது. மாவு புளித்த பின்பு மீதமாக இருக்கும் கருப்பட்டியை ரேச்த்து பணியார மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
பணியார சட்டியை அடுப்பில் வைத்து குழியில் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து பணியாரமாக மாவு ஊற்றி இரண்டு பக்கமும் நன்றாக வேக வைத்து எடுத்தால் சுவையான பணியாரம் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |