கீர்த்தி சுரேஷ் இவரைத் தான் காதலிக்கிறாரா? முதன்முறையாக மனம் திறந்த பெற்றோர்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் விஜய், தனுஷ், சூர்யா போன்ற முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தவர்.
இவர் நடித்த நடிகையர் திலகம் திரைப்படம் பட்டிதொட்டி எங்கும் பேசப்பட்டது.
தற்போது நடிகர் நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தசரதா திரைப்படம் பான் இந்தியா படமாக வெளியாக இருக்கின்றது.
இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷின் பெற்றோர் அண்மையில் ஊடகமொன்றிற்கு பேட்டியொன்றை அளித்திருந்தனர்.
அதில் கீர்த்தி சுரேஷின் காதல் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதில், “சினிமாத் துறையைப் பொருத்தவரையில் இவ்வாறான பேச்சுக்கள், கிசுகிசுக்கள் வரத்தான் செய்யும்.
காதல் ஏதேனும் இருந்தால் அதை எங்களிடமே வந்து சொல்லப் போகிறாள். நாங்கள் அதை அனைவருக்கும் தெரிவிக்கத்தான் போகிறோம். இவ்வாறான பேச்சுக்கள் வருகிறதென்றால்,
அவர்கள் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம். எனவே நாங்கள் இதனை பெரிதாக்க விரும்பவில்லை” என்று கூறியுள்ளனர்.