என்னை பற்றி கிசுகிசுக்கள் இல்லை.. ஏனென்றால்! மனைவி பற்றி பேசிய நெப்போலியன்
இப்படியொரு மனைவி கிடைத்ததற்கு கடவுளுக்குதான் நன்றி சொல்ல வேண்டும் என நடிகர் நெப்போலியன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
நெப்போலியன் அமெரிக்காவில் தனது குடும்பத்துடன் செட்டிலாகியுள்ளார்.
அண்மையில் கூட பிரபல Youtuber ஒருவர் அமெரிக்காவில் இருக்கும் நெப்போலியனின் வீட்டிற்கு சென்று அவருடைய வீட்டை சுற்றி பார்த்த வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அந்த வீடியோ சமூக ஊடகங்களில் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வந்த நிலையில் ஒரு நேர்காணலில் நடிகர் நெப்போலியன் தனது மனைவி பற்றி உருக்கமாக பேசியுள்ளார்.
நெப்போலியன் மனைவி
1993ஆம் ஆண்டு ஜெயசுதா என்பவரை மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி தலைமையில் இயக்குனரும் நடிகருமான பாரதிராஜா முன்னிலையில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இவர்கள் இருவரும் திருச்சியைச் சேர்ந்தவர்களாம். வயது அடிப்படையில் இருவருக்கும் 9 ஆண்டுகள் வித்தியாசம் உள்ளதாம். ஜெயசுதா கல்லூரி படித்துக் கொண்டிருந்த வேளையில் திருமணம் வீட்டார்களால் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
நெப்போலியன் கல்லூரி செல்லும் போது ஜெயசுதா பாடசாலை சென்றார் என்று அடிக்கடி நண்பர்கள் கேலி செய்வார்களாம். தன்னைப்பற்றி அதிக கிசு கிசு தகவல்கள் எதும் வரவில்லை எனவும் கூறியுள்ளார்.

மேலும், தனக்கு திருமணம் முடிந்து 29 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதாகவும் தனக்கு எப்போதும் மனைவி ஜெயசுதா துணை நிற்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த தம்பதிகளுக்கு தனுஷ் நெப்போலியன் மற்றும் குணால் நெப்போலியன் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
இவர் அமெரிக்காவில் செட்டில் ஆனதற்கு இவரது மூத்த மகன் அவருடைய மூத்த மகன் தனுஷ் நெப்போலியனுக்கு தசைவளக் குறைபாட்டு நோய் உள்ளதால் கடந்த பல வருடங்களாக அமெரிக்காவில் தங்கி அதற்கு மருத்துவ சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

தான் வீட்டில் இல்லாத நேரங்களிலும் தனது மகனை தனி ஆளாக பார்த்துக்கொள்வார் என பெருமையாக பேசியுள்ளார்.
மேலும், மனைவி அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம். எனக்கு இப்படிபட்ட மனைவி அமைந்ததற்கும் கடவுள் கொடுத்த வரம் தான் என கூறியுள்ளார்.
அரசியல்

கடந்த 2009ஆம் ஆண்டு முதல் அரசியலில் இருந்து வந்துள்ளார். தி.மு.க சார்பில் போட்டியிட்டு ஒரு முறை எம்.எல்.ஏவாக ஆகியுள்ளார்.
அழகிரியின் விசுவாசியாக ஒருந்த நெப்போலியன், 2014இல் தி.மு.க வை விட்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.
தனக்கு சிறுவயதில் இருந்து அரசியல் என்றால் மிகவும் பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.