'அக்கா' வெப் தொடரைத் தொடர்ந்து வைரலாகும் கீர்த்தி சுரேஷின் புதிய புகைப்படங்கள்!
Keerthy Suresh new look photos goes viral : நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஹிந்தியில் அக்கா வெப் தொடர் கடந்த அக்டோபர் 30ம் தேதி வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வரும் நிலையில், செம ட்ரெண்டிங்கான உடையில் கீர்த்தி சுரேஷ் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
நடிகை கீர்த்தி சுரோஷ்
தென்னிந்தியத் திரையுலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி, முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

அழகான நடிப்பு, இயல்பான தோற்றம், கதாபாத்திரங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் திறமை எனப் பல சிறப்புகளைக் கொண்ட இவர், திருமணத்திற்குப் பிறகும் சினிமாவில் தொடர்ந்து தனது பயணத்தை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறார்.
தென்னிந்திய மொழிப் படங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த கீர்த்தி சுரேஷ், 'பேபி ஜான்' திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகிலும் கதாநாயகியாக அறிமுகமானார். இருப்பினும், இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது.

இதற்கிடையில், தனது நீண்டகால காதலரான ஆண்டனியை சுமார் 15 ஆண்டுகால காதலுக்குப் பிறகு திருமணம் செய்து கொண்டார் கீர்த்தி சுரேஷ். திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த பின்னரும், சினிமா மீதான தனது ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் குறைத்துக்கொள்ளாமல் தொடர்ந்து நடித்து வருகிறார்.
குறிப்பாக, பாலிவுட் திரையுலகில் கால்பதித்த பின்னர் கீர்த்தி சுரேஷின் திரைப்பயணத்தில் புதிய மாற்றங்கள் தென்படுவதாகவும், அவரது கதாபாத்திரத் தேர்வுகள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருவதாகவும் பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஹிந்தி வெப் தொடரான 'அக்கா' கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வெளியாகியுள்ளது. இந்தத் தொடரில் அவரது நடிப்பைக் காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், தொடரும் ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகிறது.

இவ்வாறு அடுத்தடுத்த படைப்புகள் மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வரும் கீர்த்தி சுரேஷ், தற்போது வெளியிட்டுள்ள ஸ்டைலிஷான புகைப்படங்கள் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
விதவிதமான ஸ்டைலில் மிகவும் அழகாகவும் கம்பீரமாகவும் போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், லைக்குகளையும் பாராட்டுகளையும் குவித்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |