திருமணம் முடிந்து 3 வாரங்கள் ஆகியும் மஞ்சள் கயிற்றை மாற்றாதது ஏன்? கீர்த்தி சுரேஷ் விளக்கம்
நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணமாகி 3 வாரங்கள் ஆகியும் மஞ்சள் கயிற்றை மாற்றி தங்கத்தில் தாலி அணியாமல் இருப்பதற்கான காரணத்தை வெளிப்பமுத்தியுள்ளார்.
கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் அவரின் நீண்ட நாள் காதலன் ஆண்டனி தட்டில் இருவருக்கும் கடந்த டிசம்பர் 12 ஆம் திகதி கோவாவில் வெகுவிமர்சையாக திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்த கையோடு கீர்த்தி சுரேஷ் தான் ஹிந்தியில் அறிமுகமாகிய பேபி ஜான் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
குறித்த புரொமோஷன் நிகழ்வுகளில் ட்ரெண்டிங் உடையில் கழுத்தில் மஞ்சள் கயிறுடன் கலந்துக்கொண்டு கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.
திருமணம் முடிந்து 3 வாரங்கள் ஆகியுள்ள நிலையிலும் அவர் தங்க தாலிக்கு பதிலாக மஞ்சள் கயிற்றை தொடர்ந்து அணிந்து வருகிறார். அது குறித்து நிகழ்வொன்றில் கீர்த்தி சுரேஷிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர் மஞ்சள் கயிற்றை ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு அகற்றக் கூடாது என்பதால் அதை தொடர்ந்து அணிந்து வருகிறேன் எனவும் ஒரு நல்ல நாள் பார்த்துக் கொண்டிருக்கிறோம், அது ஜனவரி இறுதியில் வருகிறது, அப்போது தான் மாற்ற முடியும் எனவும் பதிலளித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |