அசோக் செல்வனை விட கீர்த்தி பாண்டியனுக்கு அதிக சொத்துக்களா? எத்தனை கோடி தெரியுமா?
அருண் பாண்டியன் மற்றும் அவரது மருமகன் அசோக் செல்வன் சொத்து மதிப்பு குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
அசோக் செல்வன்
பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியனை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் தான் நடிகர் அசோக் செல்வன்.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அசோக் செல்வன், தந்தையின் தொழில் காரணமாக 3 வயதிலேயே குடும்பத்துடன் சென்னையில் செட்டில் ஆகியுள்ளனர்.
பின்பு பள்ளி படிப்பு மற்றும் கல்லூரி படிப்பை முடித்த இவர், விசுவல் கம்யூனிகேசன் படிப்பையும் முடித்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதியுடன் சூது கவ்வும் படத்தில் நடித்து மக்களிடையே பிரபலமானார்.
பின்பு பீட்சா 2, வில்லா படத்தில் ஹீரோவாக நடித்த இவர், வெப் தொடரிலும் கலக்கி வருகின்றார். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான இவர், அருண்பாண்டியன் மகள் கீர்த்தியை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் அசோக் செல்வன் மற்றும் அருண் பாண்டியன் சொத்து விபரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அசோக் செல்வன் சொத்து மதிப்பு 10 முதல் 15 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.
ஆனால் இவரை விட இவரது மாமனார் அருண் பாண்டியன் பல மடங்கு வசதி படைத்தவராம். இவரது சொத்து மதிப்பு 120 முதல் 140 வரை இருக்கும் என்று கூறப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |