தனது மகனுக்கு இதுதான் பிடிக்கும்... நடிகர் விஜய் கூறியது என்ன?
நடிகர் விஜய் தனது மகன் சஞ்சய் குறித்து பல விஷயங்களை கூறியுள்ளது இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகின்றார். சமீபத்தில் வெளியான வாரிசு படம் சரியான பெயரைக் கொடுக்காததால் குறித்த படத்தில் அதிக எதிர்பார்ப்புடன் காணப்படுகின்றனர்.
குறித்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருப்பதால் பயங்கர சூடு பிடித்துள்ளது.
லியோ படத்தின் செப்டம்பர் 30ம் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி நடக்க உள்ள நிலையில் இப்படமானது 450 கோடிக்கு மேல் வியாபாரமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லியோ படத்திற்கு பின்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தை ஆரம்பிக்கவிருக்கும் விஜய், சமீபத்தில் அமெரிக்கா சென்று அங்கு 3டியில் தனது உடல் முழுவதையும் ஸ்கேன் செய்து கொண்டாராம்.
ஜேசன் சஞ்சய்
இந்நிலையில் விஜய்யின் வீட்டிலிருந்து இரண்டாவதாக இயக்குனர் வந்துள்ளார். ஆம் விஜய்யின் மகன் சஞ்சய் கனடா, லண்டனில் பட இயக்கம் தொடர்பான படிப்பை முடித்துள்ள நிலையில், லைகா நிறுவனம் தயாரிப்பில் முதல் படத்தை இயக்கவுள்ளதாகவும், இப்படத்தில் கவின் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் தனது மகன் சஞ்சய் குறித்து முன்பு பேசியது வைரலாகி வருகின்றது. சிறுவயதிலிருந்தே சஞ்சய்க்கு கிரிக்கெட் என்றால் மிகவும் பிடிக்கும்... நன்றாக கிரிக்கெட் விளையாடவும் செய்வார் என்றார்.
ஆனால் விஜய்யின் மகன் சஞ்சய் நடிகராக வருவார் என்று எதிர்பார்த்த நிலையில், கமெரா முன்பு நிற்காமல் பின்னே நிற்பதற்கே விருப்பப்படுகின்றார் என்று கூறப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |