தாறுமாறான நன்மையை அளிக்கும் இஞ்சி... நீரிழிவு நோயாளிகளுக்கு நிகழும் அதிசயம்
இஞ்சி பல ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ள நிலையில், இஞ்சியை எடுத்துக்கொள்வதால் என்னென்ன பயன்கள் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
சமையலறை வைத்தியத்தில் முக்கிய பொருளாக இருக்கும் இஞ்சியை உணவில் அதிகமாக பயன்படுத்தி வருகின்றோம். இதனை மருந்திற்கும், பச்சையாக மென்றும், சாறாகவும், தேநீர் அல்லது மூலிகை டீயுடன் சேர்த்து அருந்தலாம்.
இஞ்சியில் உள்ள 'ஜிஞ்சரால்' என்ற கலவை மிகவும் நன்மை பயப்பதுடன், இதில் வைட்டமின் பி3, வைட்டமின் பி6, வைட்டமின் சி, இரும்புச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், ஜிங்க், ஃபோலேட் போன்ற சத்துக்கள் உள்ளன.
இஞ்சி எடுத்துக்கொள்வதால் உள்ள பயன்கள்
செரிமான சக்தியை மேம்படுத்தும் இஞ்சியை, நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தவும் உதவுகின்றது. வயிறு சம்பந்தமான பிரச்சினையை போக்கவும், வாயு, மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சினையை தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்கின்றது.
மன அழுத்தத்தினை குறைக்கவும், மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், அல்சைமர் போன்ற மனநோயிருந்து பாதுகாக்கவும் இஞ்சி உதவுகின்றது.
இஞ்சியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கொழுப்பைக் கரைப்பதால், எடையைக் குறைக்க உதவுவதுடன், சளி, இருமல் இவற்றினையும் தடுக்கின்றது.
நீரிழிவு அபாயத்தை குறைக்கும் இஞ்சி மூட்டுவலி நோயாளிகளுக்கும் சிறந்ததாக இருக்கின்றது. ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகின்றது.
சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் இயற்கையான டையூரிடிக்கள் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |