சத்தான கீரை சாதம் எப்படி செய்யலாம்? இதோ குறிப்பு...
பொதுவாகவே குழந்தைகள் மற்ற உணவுகளை உண்பதைவிட கீரைகளை மிகவும் குறைவாகவே உண்கின்றனர்.
அந்த வகையில் கீரைகளை உண்ணாத குழந்தைகளுக்கு இதைப்போல் கீரை சாதம் செய்துகொடுக்கலாம்.
image - You tube
தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி - 200 கிராம்
முளைக்கீரை - ஒரு கட்டு
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
வெள்ளைப் பூண்டு - 2 பல்
பச்சை மிளகாய் - 2
தனியா - 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
துவரம் பருப்பு - 2 மேசைக்கரண்டி
நெய் - 50 கிராம்
பட்டை,கிராம்பு, ஏலக்காய் - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
image - You tube
செய்முறை
முதலாவதாக கீரையை நன்றாக அலசிக் கொள்ளவும். அரிசியை நன்றாக கழுவி வேகவைத்துக் கொள்ளவும். அத்துடன் துவரம் பருப்பையும் வேகவைத்துக் கொள்ளவும்.
பின்னர் கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், தனியா சேர்த்து வறுத்ததன் பின்னர், கிராம்பு, ஏலக்காய், பட்டை சேர்த்து மேலும் வறுத்துக் கொள்ளவும்.
அதற்கடுத்ததாக, நெய்யில் வெள்ளைப்பூண்டு சேர்த்து வதக்கி, அதனுடன் வறுத்து வைத்துள்ள பொருட்களை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
மீதியுள்ள நெய்யை கடாயில் விட்டு அதனுடன் கீரையை சேர்த்து வதக்கவும். பின்னர் ஊறவைத்த அரிசி, அரைத்த கலவை, வெந்த பருப்பு, பச்சை மிளகாய், உப்பு என்பவற்றை அதில் சேர்த்து நன்றாக கலக்கவும்.
ஒரு பங்கு அரிசிக்கு, ஒரு பங்கு தண்ணீர் என்ற விகிதத்தில் தண்ணீர் விட்டு, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். சத்தான கீரை சாதம் தயார்.
image - You tube