அரிசியை ஏன் ஊறவைத்து சாப்பிடவேண்டும்? அப்படி மீறினால் என்ன நடக்கும் தெரியுமா?
ஒரு காலத்தில் அரிசி பணக்காரர்கள் மட்டும் உண்ணும் உணவாக இருந்தது. அப்போது முதலே நமது மக்களுக்கு அரிசி மீதான மோகம் அதிகரித்தது. அரிசியை கொண்டு பலவிதமான உணவுகளை நாம் தயாரித்து உண்கிறோம்.
அரிசியை சரியாக சமைக்காதபோது அதனால் நமது உடலுக்கு உபாதைகள் ஏற்படலாம். ஒரு ஆராய்ச்சியில் அரிசியில் இருந்து ஆர்சனிக் விஷத்தை குறைப்பதற்கான சில வழிமுறைகளை கண்டறிந்துள்ளது.
இதற்காக அரிசியானது பல்வேறு முறைகளில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது, அரிசியை முதல் நாள் இரவு ஊற வைத்து மறுநாள் அதன் நச்சுத்தன்மை சோதிக்கப்பட்டன. அப்போது 80 சதவீதம் குறைவான அளவில் நச்சுக்கள் இருந்ததை அவர்களால் காண முடிந்தது.
மேலும் மூன்று வெவ்வேறு சோதனைகள் நடத்தப்பட்டன. முதலில் ஒரு பங்கு அரிசிக்கு அதை விட இரண்டு பங்கு அதிகமாக தண்ணீர் சேர்க்கப்பட்டது, பிறகு சமைக்கும்போது அந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
இரண்டாவது முறை அரிசியை விட ஐந்து பாகங்கள் அதிகமாக அளவில் நீர் சேர்க்கப்பட்டது, பிறகு அரிசியை சமைக்கும்போது அதிகமான அளவில் நீர் வெளியேற்றப்பட்டது. அப்போது ஆர்சனிக் அளவானது அரிசியில் கிட்டத்தட்ட பாதிக்கு பாதி குறைந்து இருந்தது. அதன் பிறகு அரிசியை மூன்றாவது முறையாக ஒரு நாள் இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து மறுநாள் சோதனை செய்தபோது 80 சதவீதம் ஆர்சனிக் குறைந்து இருந்தது.
எனவே இட்லி போன்ற மாவுக்காக அரிசியை ஊற வைக்கும்போது நாம் அதிக நேரம் ஊற வைப்பதால் அதில் குறைவான அளவிலேயே ஆர்சனிக் இருக்கும். இதனால், அரிசியை சமைக்கும்போது இரண்டு விஷயத்தை நன்றாக நினைவில் வைத்துக் கொள்வோம்.
ஒன்று அரிசியை விட ஐந்து பங்கு அதிகமான நீரில் அரிசியை அலசலாம், அல்லது 3 முதல் 4 மணி நேரங்கள் அரிசியை ஊற வைத்து அதன் பிறகு சமைக்கலாம்.
முதல் முறையை விடவும் இரண்டாம் முறை அதிக பலன் தரக்கூடியது. இதனால் ஆர்சனிக் பிரச்சனைகளில் இருந்து நம்மை நாம் பாதுக்காத்துக்கொள்ள முடியும்.