பிரிட்ஜ் ஃப்ரீசருக்குள் கண்ணாடியை வைக்கலாமா? அப்படி வைத்தால் என்ன நடக்கும்
பிரிட்ஜ் ஃப்ரீசருக்குள் கண்ணாடி வைப்பது நல்லது என்ற தொனிப்பொருளுடன் சமூக வலைத்தளங்களில் வீடியோக்காட்சியொன்று வைரலாகி வருகின்றது.
பிரிட்ஜு பாவனை
இந்த காட்சியை பார்த்த பயனர்கள் தங்களின் கண்ணாடிகயை ஃப்ரீசருக்குள் வைத்துள்ளார்கள். அந்த வகையில் ஃப்ரீசருக்குள் கண்ணாடிகளை வைக்கலாமா? அதில் வரும் பாதிப்புகள் குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.
பொதுவாக வீடுகளில் பிரிட்ஜுக்குள் பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மற்றும் மருத்துவ பொருட்கள் சிலவற்றை வைப்பார்கள். இது அதன் ஆயுட்காலத்தை பாதுகாக்கும்.
மாறாக முக்குகண்ணாடியை ஃப்ரீசருக்குள் வைத்து பெண்ணொருவர் பாதுகாத்து வருகிறார். இந்த காட்சிகளை பார்க்கும் போது சற்று வினோதமாக இருந்தாலும் அதற்கான விளக்கமும் இருக்கின்றது.
வைரல் காட்சி
அதில்,“ கண்ணாடியை எடுத்து ப்ரீசருக்குள் சுமார் 10 -15 நிமிடங்கள் வரை வைத்து விட வேண்டும். இவ்வாறு செய்வதால் குளிர்ந்த நீர்துளிகள் அதன் மீது இருக்கும்.
அந்த துளிகளை கார்டன் துணியால் துடைக்கும் போது கண்ணாடியில் இருக்கும் மாசுக்கள் அகன்று விடுமாம். இந்த முறையை பயன்படுத்தி மாசுக்களை அகற்றுவதன் மூலம் கண்ணாடிக்கு எந்தவித ஸ்க்ராட்ச்சும் ஏற்படாது” என குறித்த வீடியோக்காட்சியில் கூறப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து நாம் பயன்படுத்தும் கண்ணாடிகளை அலமாரி, ஜன்னல், மேஜை உள்ளிட்ட இடங்களில் தான் வைத்திருப்போம்.
இவ்வாறு செய்வதால் மாசுக்கள் கண்ணாடியை சுற்றியிருக்கும். இந்த முறையை பயன்படுத்துவதால் இப்படியான மாசுகள் அகற்றப்படுகின்றது.
இந்த வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த இணையவாசிகள், நேர்மறையான கருத்துக்களை தான் பதிவு செய்து வருகிறார்கள்.