மனைவியின் உடல் உறுப்புகளை ஃப்ரீசரில் வைத்திருந்த கணவர்- பதைபதைக்க வைத்த சம்பவம்
தனது மனைவியை கொன்று உடல் உறுப்புகளை பாதுகாத்து வைத்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரனைச் சேர்ந்த திருமண ரியாலிட்டி ஷோ பிரபலம் ஆன Petr Begun என்பவர் 2019 ஆம் ஆண்டின் வெற்றியாளராக தேர்வு ஆனார்.
இவர் முன்னாள் கொலை வழக்கு விசாரணை அதிகாரியுமான Petr Begun தம்முடைய வருங்கால மனைவியாக வலம் வந்த Olha Davydenko, 39 என்கிற பெண்ணை கொலை செய்து இப்படி ஒரு காரியத்தை செய்திருக்கிறார்.
அதன் பின்னர் அவரது உடல் பாகங்களை உக்ரைனின் பல நகரங்களில் வீசியுள்ளார். அதுமட்டுமின்றி இதயம் மற்றும் பல உறுப்புகளை ஃப்ரீசரில் வைத்து பல நாட்களாக பத்திரப்படுத்தி வந்திருக்கிறார்.
பெண்ணின் உடல் பாகங்கள் கிடைத்ததை அடுத்து, உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கும் முன்னர் இவர்கள் இருவரும் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்ததும், பழகிய ஒரு வாரத்திலேயே அந்த பெண் இந்த நபரின் குடியிருப்புக்கு இடம் பெயர்ந்ததும் தாமதமாகவே தெரிய வந்திருக்கிறது.
ஒருவேளை இவருடைய குற்றம் நிரூபிக்கப்பட்டால், இந்த நபருக்கு 15 ஆண்டுகள் வரைக்கும் தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.