'கயல்' சீரியல் நடிகை சுபாஷினி மரண விவகாரத்தில் திடீர் சிக்கல் - நடந்தது என்ன?
‘கயல்’ இதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த இலங்கையை சேர்ந்த சுபாஷினி உயிரை மாய்த்துக்கொண்டதை அடுத்து தற்போது புதிய சிக்கல் உருவாகி எள்ளது.

சுபாஷினி
சில நாட்களுக்கு முன்னர், கயல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை சுபாஷினி எதிர்பாராத விதமாக தன் உயிரை மாய்த்துக் கொண்டார். இந்த சம்பவம் சின்னத்திரையில் பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது.
இவர் இலங்கையை சேர்ந்தவர். இவருக்கு வயது 36. சுபாஸினி அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புக்களை பெற்று சமூக வலைத்தள பக்கத்திலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்.

இவர் இறப்பதற்கு முன்னர் கூட தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் மகிழ்ச்சியான வீடியோக்களை பகிர்ந்திருந்தார். இவர் கடந்த 3ம் திகதி சென்னை வந்துள்ளார்.
சென்னை வந்த அவர் நள்ளிரவில் தன்னுடைய கணவருடன் வீடியோ கால் பேசி உள்ளார். இதில் தனக்கும் தன்னுடைய கணவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக சுபாஷினி தூக்கு மாட்டி தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இதன் பின் அவருடைய கணவர் அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளிக்கு தகவல் தெரிவிக்க உயிரிழந்த நிலையில் சுபாஷினி மீட்கப்பட்டார்.

புதிய சிக்கல்
அவரின் உடலை இலங்கை எடுத்துச் செல்வதில் சிக்கல் எழுந்துள்ளது. இதன்படி எஃப்ஐஆர்-ல் உள்ள பெயருக்கும் சுபாஷினியின் பாஸ்போர்ட்டில் உள்ள பெயருக்கும் வேறுபாடு இருப்பதால் உடலை இலங்கைக்கு எடுத்து செல்ல அனுமதி கிடைக்கவில்லை.

இதனையடுத்து குடும்பத்தினரின் முயற்ச்சியுடன் சுபாஷினியின் உடல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே தன்னுடைய பிறந்தநாளுக்காக வரவிருந்த இலங்கைக்கான விமானத்தின் மூலம் இவருடைய உடல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
நடிகை சுபாஷினியின் உடல் தற்போது பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவருடைய பிறந்தநாளன்று இறுதிச்சடங்கு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |