யார் இந்த காவ்யா மாறன்.. ஆர்மியை ஸ்டார்ட் பண்ணிய ரசிகர்கள்; இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படங்கள்
14-வது ஐபிஎல் சீசனின் நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய இரு அணிகள் மோதின.
இந்த பரபரப்பான ஆட்டத்தில், பெங்களூரு அணி த்ரிலான வெற்றியை பெற்றது.
இதையடுத்து, ரசிகர்கள் கிரிக்கெட் போட்டியை அரங்கில் ரசித்தாலும் தொலைக்காட்சி, மொபைல் போன்ற திரைகளில் ரசித்தாலும் போட்டியைக் கடந்து பல சுவாரஸ்ய சம்பவங்கள் நடைபெறும்.
மேலும், போட்டியை மேலும் விறுவிறுப்புடன் பார்க்க பார்வையாளர்களின் வரவேற்பும், உற்சாகமும் முக்கியமாக அமையும்.
இதனைத்தொடர்ந்து, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள தடையால் ஐபிஎல் போட்டிகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி தரவில்லை.
இருப்பினும் அணி உரிமையாளர்கள், அவர்களைச் சார்ந்தோர் அரங்கில் அமர்ந்து வீரர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.
Warner should open with Bairstow & also have to bring back Kane Williamson.
— Nirmal Kumar 🇮🇳 (@nirmal_indian) April 14, 2021
Manish Pandey & Vijay Shankar are very disappointing, instead chances should be given to youngsters like Garg & Abhishek.
.
CAN'T WATCH HER LIKE THIS AGAIN! 😞😞#KaviyaMaran #SRHvRCB pic.twitter.com/ZWMbchuO2r
அந்த வகையில், கடந்த இரு போட்டிகளில் ஹைதராபாத் அணியின் ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் அரங்கில் அமர்ந்து கைதட்டி, துள்ளிக் குதித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார் காவ்யா மாறன்.
இவர், சன் குழுமத்தின் முதன்மை செயலாளர் கலாநிதி மாறனின் மகள்தான் காவ்யா மாறன் (29). மேலும், இவர் வணிக மேலாண்மை படிப்பில் முதுநிலை பட்டம் பெற்றுள்ளார்.
கிரிக்கெட்டிலும், இசையிலும் ஆர்வமான காவ்யா சன் குழுமத்தின் மியூசிக் தொலைக்காட்சியையும், அதன் கிரிக்கெட் அணியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியையும் நிர்வகித்து வருகிறார்.
Today only sad for #KaviyaMaran
— Jit Singh (RCBian♥️) (@imjit_01) April 14, 2021
She's the CEO of #SRH#NewCrushMaterial #SRHvRCB #RCBvsSRH #IPL2021 #RCB#PlayBold pic.twitter.com/nsKQUQXW77
இதையடுத்து, ஹைதராபாத் அணி இதுவரை ஆடியுள்ள இரு ஆட்டங்களிலும் தோல்வியடைந்தாலும் அடுத்து வரும் ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்ல காவ்யாவின் ஊக்கம் முக்கிய காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது.
வீரர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் காவ்யாவின் புத்துணர்ச்சி கண்டு உற்சாகமாகிறார்கள். கேமராவை காவ்யா பக்கம் திருப்புங்க சார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
தற்போது, காவ்யா மாறனுக்கு இணையத்தில் ஆர்மிகளை தொடங்கி புகைப்படத்தை பதிவிட்டு வருகின்றனர்.