அசத்தல் சுவையில் சாக்லேட் பணியாரம்... வீட்டிலேயே எளிமையாக எப்படி செய்வது?
பொதுவாகவே சாக்லேட் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள்.
சாக்லேட் வைத்து ஆரோக்கியமான முறையில் வீட்லேயே அசத்தல் சுவையில் பணியாரம் செய்வது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
முட்டை - 1
காய்ச்சிய பால் - 1 கப்
உருக்கிய வெண்ணெய் - 1/4 கப்
வெண்ணிலா எசன்ஸ் - 1/4 தே.கரண்டி
மைதா மாவு - 1 கப்
கோகோ பவுடர் - 4 மேசைக்கரண்டி
பொடித்த சர்க்கரை - 5 மேசைக்கரண்டி
பேக்கிங் பவுடர் - 2 தே.கரண்டி
சாக்லேட் சிப்ஸ் - 2 மேசைக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து , அதனுடன் பால், வெண்ணெய், வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து மீண்டும் நன்றாக அடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் இந்த கலவையோடு மைதா மாவு கலவையை சேர்த்து கட்டி இல்லாமல் நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும்.
அதனையடுத்து வேறோரு கிண்ணத்தில் மைதா, கோகோ பவுடர், பொடித்த சர்க்கரை, பேக்கிங் பவுடர், மற்றும் ஒரு சிற்றிகை உப்பு சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் இந்த கலவையை முட்டை, மைதா கலவையுடன் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும். கடைசியாக சாக்லேட் சிப்ஸ் சேர்த்து கலந்து இட்லி மாவு பதத்திற்கு கலந்துக்கொள்ள வேண்டும்.
இதன் பின்பு பணியாரக் கல்லை அடுப்பில் வைத்துநெய்விட்டு சூடானதும் ஒவ்வொரு கரண்டி சாக்லேட் மாவு எடுத்து அதில் ஊற்றி இரண்டு பக்கமும் வேகவிட்டு எடுத்தால் போதும் அசத்தல் சுவையில் சாக்லேட் பணியாரம் தயார். வீட்லேயே செய்ததால் குழந்தைகளுக்கு பயமின்றி கொடுக்கலாம்.
புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுப்பது முதல் எடை குறைப்பு வரை: ப்ரோக்கோலி சூப்பின் அற்புத நன்மைகள்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |