கருணாஸ் மகளுக்கு திருமணம்! ஹீரோயின்ஸ்க்கே டஃப் கொடுக்கும் அழகிய புகைப்படங்கள்: மாப்பிளையை பார்த்திருக்கீங்களா?
பிரபல நகைச்சுவை நாயகன் கர்ணாஸின் மகளின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சினிமா பயணம்
தமிழ் சினிமாவில் நந்தா, திருடா திருடி, பிதாமகன் ஆகிய திரைப்படங்களில் நகைச்சுவை நாயகனாக பலரின் மனதை கவர்ந்தவர் தான் நடிகர் கருணாஸ்.
இதனை தொடர்ந்து திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார்.
இவரின் பணியை சினிமாவில் மட்டும் நிறுத்தி விடாமல் கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திருவாடானை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாகவும் தெரிவாகியிருந்தார்.
இதனை தொடர்ந்து கிரேஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட கருணாஸ்க்கு, கென் கருணாஸ் என்ற மகனும், டயானா என்ற மகளும் இருக்கிறார்கள்.
மகளின் திருமணம்
அதில் மகன் கென் கருணாஸ், கடந்த 2019-ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான “அசுரன் ” படத்தில் “சிதம்பரம் ” என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் அறிமுகமாகியிருப்பார்.
தனது அப்பாவை போன்று இவரும் பல துறைகளில் சாதனை படைப்பார் என தனது முதல் திரைப்படத்திலே பாராட்டுக்களை பெற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் கென் கருணாஸ் தனது சகோதரியின் திருமண புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், "இனிய திருமண வாழ்த்துகள் அக்கா & மாமா" என கென் கருணாஸ் குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிவை பார்த்த கருணாஸ் ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.