கார்த்திகை தீபம் ஏற்றுகிறீர்களா? இந்தத் தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்!
Karthigai Deepam 2026 - 5 Mistakes to Avoid While Lighting Diyas : கார்த்திகை தீபத் திருநாள் என்பது சிவபெருமானின் ஜோதி வடிவத்தைப் போற்றிக் கொண்டாடப்படும் ஒரு புனிதமான நாளாக கருதப்படுகின்றது. இந்நாளில் வீடுகளிலும் ஆலயங்களிலும் அகல் விளக்குகள் ஏற்றி வழிபடுவது வழக்கமாகும்.
குறிப்பாக, திருவண்ணாமலையில் ஏற்றப்படும் மகா தீபம் இத்திருநாளின் சிறப்பம்சமாக விளங்குகிறது. இந்நிலையில், கார்த்திகை தீபத்தன்று வீடுகளில் விளக்கேற்றும்போது சில விடயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என ஆன்மிக நம்பிக்கைகள் தெரிவிக்கின்றன. இது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

விளக்கேற்றும்போது தவிர்க்க வேண்டிய 5 தவறுகள்
பழைய அகல் விளக்குகளைப் பயன்படுத்துதல்: ஒவ்வொரு ஆண்டும் புதிய அகல் விளக்குகளை வாங்குவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. அவற்றை மூன்று மணி நேரம் நீரில் ஊறவைத்து, நன்கு உலர்த்திய பின்னரே பயன்படுத்த வேண்டும்.
ஒற்றைத் திரி பயன்படுத்துதல்: ஒற்றைத் திரிக்குப் பதிலாக இரண்டு திரிகளை ஒன்றாகச் சேர்த்துத் தீபம் ஏற்றுவது குடும்ப ஒற்றுமைக்கும் மங்களத்திற்கும் சிறந்தது என நம்பப்படுகிறது.

ஒவ்வொரு விளக்கையும் தீக்குச்சியால் ஏற்றுதல்: முதலில் பூஜை அறையில் விளக்கேற்றி, அதிலிருந்து மற்ற அகல் விளக்குகளையும் ஏற்றுவது மரபாகக் கருதப்படுகிறது.
வெறும் தரையில் விளக்குகளை வைத்தல்: அகல் விளக்குகளைப் பச்சரிசி மாவுக் கோலத்தின் மீதோ அல்லது பூவின் மீதோ வைத்து ஏற்றுவது சிறப்பானதாகக் கூறப்படுகிறது.
வாயால் ஊதி அல்லது கையால் அணைத்தல்: விளக்குகளை வாயால் ஊதியோ கையால் அணைத்தோ விடாமல், பூவைக் கொண்டு அணைப்பது பாரம்பரிய வழக்கமாகும்.

வீட்டில் எத்தனை விளக்குகள் ஏற்றலாம்?
கார்த்திகை தீபத்தன்று 27 அகல் விளக்குகள் ஏற்றுவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இந்த 27 விளக்குகளும் 27 நட்சத்திரங்களைக் குறிக்கின்றன. அவ்வாறு ஏற்ற முடியாதவர்கள் 9 அல்லது 11 விளக்குகளையும் ஏற்றுவது சிறப்பு.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |