ஏராளமான நன்மைகளை அள்ளிக் கொடுக்கும் கற்பூரவள்ளி சட்னி!
மருந்து மாத்திரைகளுக்கு பதிலாக நாம் தினமும் சமைத்து உண்ணும் சில உணவுகளை ஆரோக்கியமாக எடுத்துக் கொண்டால் நோய் நொடிகள் இல்லாமல் வாழலாம்.
அப்படி பல நன்மைகளைக் கொண்டுள்ள கற்பூரவள்ளி இலையானது ஒரு மூலிகை மருந்தாகும். இதன் வாசனையே பல நோய்களுக்கு மருந்தாகிறது. பல நோய்களுக்கு அருமருந்தாக இருக்கும் இந்த கற்பூரவள்ளி இலையில் சட்னி செய்து சாப்பிட்டால் பல பல வியாதிகள் உங்கள் உடலை விட்டு போய் விடும்.
அந்தவகையில் இந்த கற்பூரவள்ளி இலையில் எவ்வாறு சட்னி செய்வது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கற்பூரவல்லி இலைகள் - 4
உளுந்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
மிளகு சீரகம் - 1 தேக்கரண்டி
கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
தேங்காய் துருவல்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடலைப்பருப்பு, உளுந்து, கறிவேப்பில்லை, பச்சைமிளகாய் என அனைத்தையும் நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
பின் சுத்தப்படுத்தி எடுத்த கற்பூரவள்ளி இலையையும் சேர்த்து 5 நிமிடத்திற்கு வதக்கிக் கொள்ளவும்
அதனுடன் துருவிய தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து இறக்கிக் கொள்ளவும். தேவையெனின் மஞ்சள் சேர்த்துக் கொள்ளவும்.
இவை ஆறியவுடன் மிக்சியில் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
அரைத்தப் பின்னர் மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கடுகு, உளுந்து, சீரகம், கறிவேப்பிலை என்பவற்றை தாளித்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின் அரைத்து எடுத்துக் கொண்ட கற்பூரவள்ளி விழுதுகளை சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கினால் கற்பூரவள்ளி சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |