நெஞ்சுசளியை கடகடவென குறைக்கும் அற்புத டீ! எவ்வாறு தயாரிக்கனும்?
பொதுவாக குளிர்காலம் வந்துவிட்டாலே சளி, இருமல் தொண்டை வலி போன்றவை ஏற்படுவது சகஜம். அவர்கள் அடிக்கடி மருந்துகள் எடுப்பது சில சமயங்களில் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
அதற்கு இயற்கைமுறையில் ஒரு சில பொருட்கள் உள்ளன. அதில் கற்பூரவல்லி பெரிதும் உதவுகின்றது.
இதனை இஞ்சியுடன் சேர்த்து குடிப்பது நல்ல நிவாரணம் தரும். தற்போது இதனை எப்படி தயாரிக்கலாம் என்று இங்கே பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
டீத்தூள் - ஒரு டீஸ்பூன்
கற்பூரவல்லி - 5 இலை
இஞ்சி - சிறிய துண்டு
எலுமிச்சை சாறு - தேவையான அளவு
தண்ணீர் - 2 கப்
தேன் - 1 டீஸ்பூன்
14 ஆண்டுகளாக விமானநிலையத்திலேயே தங்கியிருக்கும் நபர்! எதற்காக இந்த முடிவு தெரியுமா?
செய்முறை
கற்பூரவல்லி இலையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும். இஞ்சியை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
தண்ணீர் நன்றாக கொதிக்கும் போது டீத்தூளுடன், கற்பூரவல்லி இலை, இஞ்சி துருவல் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும்.
நன்றாக கொதித்து டீ ரெடியானதும் இறக்கி வடிகட்டி அதனுடன் தேன், எலுமிச்சை சாறு சேர்த்துப் பருகவும். இப்போது கற்பூரவல்லி இஞ்சி டீ ரெடி.
