நொடியில் ரெடியாகும் கறிவேப்பிலை பொடி!
கல்சியம், இரும்புச்சத்து போன்ற பலவற்றை தன்னகத்தே கொண்டது கறிவேப்பிலை.
அதுமட்டுமில்லாமல் முடி வளர்ச்சிக்கு சிறந்தது.
உடலிலுள்ள கெட்ட கொழுப்பையும் கரைக்கும்.
சரி இனி கறிவேப்பிலை பொடி எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை - 2 கப்
மிளகு - 1 மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு - 2 மேசைக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 10
பெருங்காயம் - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 மேசைக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் கறிவேப்பிலையை நன்றாக கழுவி சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.
பின்னர் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் காய்ந்த மிளகாயை போட்டு வறுக்கவும்.
பின் அதில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, சீரகம், மிளகு என்பவற்றை போட்டு சிவக்க வறுத்தெடுக்கவும்.
இறுதியாக கறிவேப்பிலையை சேர்த்து, வறுத்து ஆறியதன் பின்னர் உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு பொடித்துக் கொண்டால் சத்துமிக்க கறிவேப்பிலை பொடி நொடியில் தயார்.