எந்த சோப்பும் தேவையில்லை.. சருமத்தை பளபளன்னு வெள்ளையாக்க தங்க குளியல் பொடி! செய்வது எப்படி?
நம் முன்னோர்கள் பயன்படுத்திய இயற்கையான சரும தங்க குளியல் பொடியை எப்படி செய்வது என்பதை பற்றி பார்ப்போம்...
இந்த சரும பொடியான எந்த வித அலர்ஜியையும் ஏற்படுத்தாது. முக்கியமாக பருக்கள், தழும்பு, கரும்புள்ளி போன்ற எந்த விதமான தோல் அலர்ஜியையும் குணப்படுத்தும்.
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜார் ஒன்றை எடுத்துகொள்ளுங்கள்.. அதில் ஆவாரம் பூ சேர்த்து, அரை கப் அளவு பச்சை பயிறு அதனுடன் சேர்த்துகொள்ளுங்கள்...
அடுத்ததாக ஒரு கப் அளவு ரோஜா பூ இதழ் சேர்த்து அனைத்தையும் ஒன்றாக அரைத்து கொள்ள வேண்டும். அதனுடன், அரை கப் அளவு கஸ்தூரி மஞ்சள் பொடியை சேர்த்துகொள்ளவேண்டும்..
பின் பூலான் கிழங்கு பொடி இரண்டு ஸ்பூன் அளவு சேர்த்து கொண்டால் போதும் ஒரு அருமையான தங்க குளியல் பொடி தயார்...
இதை அனைவரும் உபயோகப்படுத்தலாம்.. மூன்று மாதம் வரை இந்த தங்க குளியல் பொடியை பயன்படுத்திக்கொள்ளலாம்..
பயன்படுத்தும் முறை
மேலும், இதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்றால், இரண்டு ஸ்பூன் தேவையான அளவு ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு, ரோஸ் வாட்டர், அல்லது பால், தயிர் எதனுடன் வேண்டும் என்றாலும் சேர்த்துகொண்டு கலக்கி கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் உடல் முழுவதும் தடவிக்கொண்டு, அரை மணிநேரம் கழித்து குளித்துவிடலாம்.. ஒரு வாரத்திற்குள் இதன் சிறப்பை நீஙகள் காணலாம்...