கன்னியாகுமரி சென்றால் மறக்காமல் இந்த இடங்களை பாருங்க
இந்தியாவின் தென்கோடியிலும், தமிழ்நாட்டின் கடைசி முனையிலும் கன்னியாக்குமாரி அமைந்துள்ளது.
இந்த இடத்தை ஆங்கிலத்தில் “தி என்ட் ஆப் இந்தியா” என்று அழைப்பார்கள்.
வரைப்படத்தில் பார்க்கும் போது சரியான விளக்கம் கொடுக்க வேண்டும் என நினைத்தால் இந்த இடம் வங்காள விரிகுடா, அரபிக்கடல், இந்திய பெருக்கடல் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது.
மேலும் கன்னியாக்குமரியில் நம்மாள் மறக்க முடியாத பல இடங்கள் இருக்கின்றது. இது குறித்து தான் தொடர்ந்து பார்க்க போகிறோம்.
1. கன்னியாகுமரி கடற்கரை
இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரி கடற்கரையில் காலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தை நேராக பார்க்கலாம்.
அத்துடன் சூரியன் மறைவதையும் இங்கு காணலாம். இதன் காரணமாக தான் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
2. விவேகானந்தர் பாறை நினைவு மண்டபம்
கடலுக்கு நடுவில் தான் இந்த இடம் இருக்கின்றது. இந்த மண்டபத்திற்கு ஒரு வரலாற்று கதை இருக்கின்றது. கன்னியாக்குமரிக்கு வந்த விவேகானந்தர் தரையிலிருந்து சரியாக கி.மீ தூரம் நீந்தி இந்த பாறையை அடைந்தாராம்.
இதன் காரணமாக இந்த பாறையை “விவேகானந்தர் பாறை” என அழைக்கிறார்கள். இந்த பாறையை சென்று பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டால் இங்கு படகு சேவையும் உள்ளது.
3. திருவள்ளுவர் சிலை
குழந்தைகளுக்கு இந்த இடம் பயனுள்ளதாக இருக்கும் கன்னியாக்குமரி கடலில் திருவள்ளுவரின் சிலை வைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலை பார்ப்பதற்கு சரியாக 30 அடியுள்ள பாறை மீது 133 அடி உயரத்தில் இருக்கும். இதனை படகின் மூலம் சுற்றி பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |