காதலனுக்கு நடக்கவிருந்த திருமணம்... மண்டபத்திற்கு நுழைந்த காதலி செய்த மாஸான செயல்
சென்னையில் காதலனுக்கு வேறு பெண்ணுடன் நடக்க இருந்த திருமணத்தை மண்டபத்திற்கு புகுந்து கடைசி நேரத்தில் காதலி .தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியில் வசிப்பவர் கணேசன் (30). இவர் வில்லிவாக்கத்தில் காய்கறி கடை நடத்தி வருகிறார்.
இவர், மின்சார ரயிலில் சென்று வரும்போது, அரக்கோணம் பகுதியை சேர்ந்த 30 வயது இளம்பெண்ணுடன் பழகி உள்ளார். இது, நாளடைவில் காதலாக மாறியது. அவ்வப்போது இருவரும் செல்போனில் பேசியும், அடிக்கடி தனிமையில் சந்தித்தும் காதலை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில், கணேசனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. வில்லிவாக்கத்தில் அதற்கான ஏற்பாடுகளை இருதரப்பு பெற்றோரும் தடபுடலாக ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள்.
திட்டமிட்டபடி நேற்று முன்தினம் இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை கல்யாணம் நடைபெற இருந்தது. அதற்கான வேலைகளும் நடந்து கொண்டிருந்தது. இதுபற்றி அறிந்த காதலி உடனே வில்லிவாக்கம் அனைத்து மகளிர் பொலிசில் புகார் அளித்தார். அதன்பேரில், பொலிசார், இளம்பெண்ணுடன் நேற்று காலை திருமண மண்டபத்துக்கு சென்றார்கள் அங்கிருந்த கணேசனின் உறவினர்களிடம், அவரது காதல் விவகாரத்தை இளம்பெண் தெரிவித்தார்.
மேலும் கணேசனுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களையும் அந்த இளம்பெண் காட்டியிருக்கிறார்.
இதையடுத்து திருமணத்தினை நிறுத்திய பொலிசார் இரு வீட்டாரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரித்த போது, திருமணத்திற்கு கணேசன் மறுத்துள்ளார். இதனால் அவரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.