யார் இந்த சுஹாஞ்சனா? தமிழ்நாட்டின் முதல் பெண் ஓதுவார்- குவியும் பாராட்டுகள்
தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டத்தில் சுஹாஞ்சனா என்ற 27 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஓதுவாராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
தமிழகத்தில் கோயில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மேலும், ஆகம விதிகளில் பயிற்சிபெற்ற தலித் மாணவர்கள் இருவர் உள்பட 58 பேரை அர்ச்சகர்களாக நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி ஆணை வழங்கியுள்ளார்.
இதில் சுஹாஞ்சனா என்ற பெண்ணும் ஒருவர், சென்னையில் மாடம்பாக்கத்தில் உள்ள தேனுபுரீஸ்வரர் கோவிலில் ஓதுவார் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் முதன்முறையாக பெண் ஓதுவாராக இவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.