கண்திருஷ்டி விரட்டியடிக்கும் பரிகாரம்.. உப்பில் செய்யலாமா?
பொதுவாக அந்த காலம் தொட்டு இன்று வரை மனிதர்களை வாழ விடாமல் தடுக்கும் ஒரே காரணம் கண் திருஷ்டி தான்.
மனிதர்களின் பகையிலிருந்து கூட விடுபெறலாம் ஆனால் அவர்களின் பார்வையிலிருந்து விடுபெறவது மிகவும் கடினமான விடயமாகும்.
இது போன்ற எதிர்மறையான தாக்கங்கள் அதிகமாக இருக்கும் பொழுது பரிகாரங்கள் செய்தால் வாழ்க்கையில் சிறப்பானதொரு மாற்றத்தை பார்க்கலாம்.
இன்றைய கால சூழ்நிலையில் நாம் பலவற்றை மறந்து விட்டோம் அல்லது மூடநம்பிக்கை என்று ஒதுக்கி விட்டோம். என்ன தான் உலகம் மாறினாலும் கண் திருஷ்டி எப்போதும் இருப்பது போல் இன்றும் இருக்கின்றது.
அந்த வகையில் கண் திருஷ்டியை எப்படி இல்லாமலாக்குவது என்பது தொடர்பில் தொடர்ந்து பார்க்கலாம்.
கண் திருஷ்டி விலக பரிகாரம்
1.ஒரு கருப்பு நிற துணியை எடுத்து அதில் கைப்பிடி அளவு உப்பை போட்டு கட்டி வீடு முழுவதும் சுற்றிய பின்னர் ஆற்றில் போட்டு விடவும்.
2.வீட்டில் எதிர்மறையான எண்ணங்கள் அதிகமாக இருக்கின்றது என்ற எண்ணம் இருந்தால் கருப்பு துணியால் கட்டிய உப்பை 24 மணி நேரம் அல்லது 18 மணி நேரம் அந்த இடத்தில் வைக்கலாம்.
3. திரும்பி வரும் பொழுது எக்காரணம் கொண்டும் அதனை திரும்பி பார்க்கக்கூடாது. அத்துடன் வீட்டிற்குள் வரும் பொழுது கை, கால் பகுதிகளை நன்றாக கழுவி விட்டு வரவும்.
முக்கிய குறிப்பு
இது ஒரு ஆன்மீக தகவல் மட்டுமே.....