வீட்டில் சிக்கன் இருக்கா? காரசாரமான கமரக்கட்டு சிக்கன் தொக்கு செய்ங்க
வீட்டில் சிக்கன் இருந்தால் அதை எப்போதும் போல சமைக்காமல் அதை யாருமே சாப்பிட்டு இருக்காத காரசாரமான கமரக்கட்டு சிக்கன் தொக்கு செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுங்கள்.
இந்த ஒரு தொக்கு மட்டும் போதும் உங்களுக்கு பாராட்டு மழை குவிந்த வண்ணம் இருக்கும்.
இந்த காரசாரமான கமரக்கட்டு சிக்கன் தொக்கு செய்ய மிகவும் எளிது. ஆனால் சுவையோ சும்மா சூப்பரா இருக்கும். இதை செய்வது எப்படி என தெரிந்துகொண்டு வீட்டில் உள்ளவர்களை சுவையில் மயங்க செய்ங்க.
தேவையான பொருட்கள்
- சிக்கன் - 500 கிராம்
- வெங்காயம் - 2 (பெரியது)
- தக்காளி - 2
- இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
- சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
- மல்லித்தூள் - 1/2 டீஸ்பூன்
- கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
- எண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
செய்யும் முறை
முதலில் சிக்கனை மஞ்சத்தூள் போட்டு நன்றாக கழுவி எடுத்த பிறகு அதில் தேவையான அளவு தயிர் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து நன்றாக கிளறி தனியாக ஊறவைக்க வேண்டும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு கடலெண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம் போட்டு அது பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். வெங்காயம் ஓரளவு வதங்கி வரும்போது அதனுடன் உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
இதற்கிடையில் தக்காளியை நன்றாக அடுப்பில் சுட்டெடுத்துக் கொண்டு பிறகு அதனுடைய தோலை உரித்து அதனுடன் பூண்டை சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் பொன்னிறமான வெங்காயத்துடன் மஞ்சத்தூள் சீரகத்தூள் காஷ்மீர் மிளகாய்த்தூள், கருவேப்பிலை, கறி மசாலா இவற்றை வெங்காயத்துடன் சேர்ந்து நன்றாக மொறு மொறுப்பாக வதக்க வேண்டும்.
பின்னர் அதில் தக்காளி பேஸ்டை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். அதில் எண்ணெய் கூடி வரும் பொழுது அதில் ஊற வைத்த சிக்கனை கொட்டி ஒரு அரை மணி நேரமாக நன்றாக வதக்க வேண்டும்.
இறுதியாக காஷ்மீர் மிளகாயிலுள்ள விதைகளை எடுத்துவிட்டு அதனை இரண்டு துண்டுகளாக கட் பண்ணி கடாயில் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். கூடவே மிகவும் சீரகத்தூளை அதன் மேல் தூவி விட வேண்டும்.
இதனை அனைத்துமே நன்றாக வதக்கி மொறு மொறு என்று எடுத்தால் சுவையான அட்டகாசமான கமர்கட்டு சிக்கன் தயாராகி விடும். இதை பராட்டா ரொட்டி சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை பிரமாதமாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |