வாழ்நாள் சாதனையாளனாக மாறிய கமல்ஹாசன்: விருது கொடுத்தது யார் தெரியுமா?
உலகநாயகனான வலம் வரும் கமல்ஹாசன் வாழ்நாள் சாதனையாளனாக விருது பெற்ற செய்தி தற்போது சமூக ஊடகங்களை ஆக்கிரமித்திருக்கிறது.
கமல்ஹாசன்
உலக நாயகன் கமல்ஹாசன் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தமிழ் திரையுலகில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருபவர் நடிகர் கமல் ஹாசன்.
இவர் 70, 80களில் ரொமாண்டிக் ஹீரோவாக பல கலக்கலான திரைப்படஙடகளை கொடுத்தவர். மேலும் ஒவ்வொரு படத்திலும் ஏதோ ஒரு வித்தியாசமான கருத்துக்களை தொழிநுட்பத்தையும் பயன்படுத்தியிருப்பார்.
இவருடைய நடிப்பில் தற்போது விக்ரம் திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றிருந்தது. இவர் ஒரு பிரபல தொலைக்காட்சியில் பெரிய நிகழ்ச்சியொன்றையும் தொகுத்து வழங்கியவர்.
வாழ்நாள் சாதனையாளர்
இந்நிலையில் அபுதாபியில் நடைபெற்ற IFFA திரைப்பட விருது வழங்கும் விழாவில் கமலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதினை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தான் தன் கைகளால் கமல்ஹாசனுக்கு கொடுத்திருக்கிறார்.
இவர் பெற்ற விருதிற்காக ரசிகர்கள் பலர் இவரைக் கொண்டாடி வருகிறார்கள்.