பிக்பாஸ் போட்டியாளர்களிடம் கண்கலங்கிய கமல்ஹாசன்! நடந்தது என்ன? பரபரப்பான ப்ரோமோ
பிக் பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்கள் அவர்களின் குடும்பம் குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பம்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் நிகழ்ச்சிகளில் பட்டிதொட்டியெங்கும் பிரபல்யமான நிகழ்ச்சியாக பிக் பாஸ் பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சி ஆரம்பத்தில் மக்களிடையே பெரிதான ஒரு ரீச்சை தரவிட்டாலும் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த நிகழ்ச்சிக்கென தனி சிறப்பம்சம் இருக்கிறது, அதில் இந்த போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் தன்னுடைய குடும்பங்களை பிரிந்து சுமார் நூறு நாட்களுக்கு மேல் ஒரு வீட்டில் இருக்க வேண்டும்.
விதிமுறைகள்
இவர்களுக்கு தனியாக சமையல் பொருட்களுடன் வீடு ஒன்று தரப்பட்டிருக்கும் போட்டியாளர்களுக்கு புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கும் அதனை போட்டியாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.
இது போன்று பல்வேறு தொழிநுட்ப முறைகளை கொண்டு நுணுக்காமான உருவாக்கப்பட்ட நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆறாவது சீசன் செல்கிறது. இதில் ஆரம்பத்தில் 21 போட்டியாளர்கள் பங்கேற்றார்கள்.
கண்கலங்கி நின்ற கமல்
தொடர்ந்து வாரத்திற்கு ஒரு போட்டியாளர் வீதம் மக்களின் வாக்குகள் அடிப்படையில் வெளியேற்றப்படுவார்கள். இதன்படி, இந்த நிகழ்ச்சியலிருந்து ஆயிஷா மற்றும் ராமை உட்பட மொத்தமாக 10 போட்டியாளர்கள் வெளியேறியிருக்கிறார்கள்.
மேலும் பிக் பாஸ் சீசன் 6ல் வால்ட் கார்ட் யார் என்றி யார் என ஒரு பரபரப்பான தகவல் வெளியாகி வருகிறது.
இன்றைய தினம் வெளிவந்த ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்கள் வெளியிலிருக்கும் அவர்களின் குடும்பம் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும் கமலும் உங்களுக்கான வாய்ப்பை பயன்படுத்துமாறு அறிவுரை கூறி கண்கலங்கியுள்ளார். அந்தவகையில் இன்றைய தினத்திற்கான இரண்டாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.