கமலுக்கும் ஸ்ரீதேவிக்கும் இடையிலான உறவு.. நடிகையின் மரணத்திற்குப் பிறகு மனம் திறந்த பிரபலம்!
கமலுக்கும் ஸ்ரீதேவிக்கும் இடையிலான உறவு குறித்து கமலஹாசன் மனம் திறந்துள்ளார்.
நடிகை ஸ்ரீதேவி
இந்திய நடிகைகளில் பேரழகியாக இன்று வரை கொண்டாடப்படுபவர் தான் நடிகை ஸ்ரீதேவி.
இவர் மறைந்து பல நாட்கள் ஆனாலும் ஸ்ரீதேவி குறித்து செய்திகள் இன்னும் வெளியாகி கொண்டு தான் இருக்கின்றது.
தமிழ் சினிமாவில் இருக்கும் போது கமல், ரஜினி என ஹீட் ஹீரோக்களுடன் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
இதன்படி, ஸ்ரீதேவி மறைவுக்குப் பிறகு உலகநாயகன் கமலஹாசன் பகிர்ந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது ஸ்ரீதேவி சினிமாவில் டாப் நடிகையாக இருந்த காலத்தில் இவர் யாருடன் இணைந்து நடிக்கிறாரோ அவருடன் தான் திருமணம் என செய்திகள் வெளியாகுமாம்.
ஆனால் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் தான் ஸ்ரீதேவி தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
கமல் கொடுத்த சர்ச்சை பேச்சு
இந்த நிலையில் இது குறித்து பேட்டியொன்றில் கமலிடம் கேட்ட போது, அவர் சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், “ எனக்கும் ஸ்ரீதேவிக்கும் இடையேயான உறவு அண்ணன் தங்கை உறவை போன்றது.
சினிமாவுக்கு இந்த கதையெல்லாம் ஒத்து வராது. நாங்கள் காதலர்கள் போல் காட்டிக் கொண்டால் எங்கள் படங்களுக்கு எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும்.
இதனால் நாங்கள் வதந்திகளை பெரிதாக கண்டுக் கொள்ளவில்லை. இது போன்ற செய்திகள் அனைத்தும் சினிமா பிரபலங்கள் மாத்திரமே. இதை தவிர்த்து எங்களுக்குள் இருப்பது அண்ணன் - தங்கை உறவு தான்..” என கூறியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அத்துடன், “ கமல் காதலிக்காத ஒரே நடிகை இவர் தானோ..? ” என ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |