சீக்ரெட் ரூமில் ஜோவிகா! உண்மையை உளறிய வனிதா விஜயகுமார்?
பிக்பாஸ் சீசன் 7ன் இன்றைய எபிசோடில் ஜோவிகா விஜயகுமார் வெளியேறியதாக கூறப்பட்ட நிலையில் சீக்ரெட் ரூமில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் புகழ் அடைந்தவர் வனிதா விஜயகுமார். இதனைதொடர்ந்து வெள்ளித்திரை, சின்னத்திரை என அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தற்போது நடந்து கொண்டிருக்கும் சீசன் 7ல் போட்டியாளராக பங்கேற்றுள்ளார் இவரது மகளான ஜோவிகா விஜயகுமார்.
18 வயது பெண்ணான ஜோவிகாவுக்கு, சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையாம்.
9ம் வகுப்பிலேயே பள்ளிப்படிப்பை விட்டுவிட்டு தனக்கு பிடித்ததை செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கிறார்.
இவர் பள்ளிப்படிப்பை படிக்காமல் இருந்ததே பல சர்ச்சைகளுக்கு காரணமானது. தொடர்ந்து ஒரு சில வாரங்களிலும் சிறப்பாகவும், ஒரு சில வாரங்களில் மந்தமாகவும் விளையாடி வருகிறார் ஜோவிகா.
சாப்பிடுவது, தூங்குவது, கீழே விழுவது என இவரை பற்றி மீம்களும் சமூகவலைத்தளங்களில் வலம்வருகின்றன.
இந்நிலையில் இந்த வாரம் மிக குறைவான வாக்குகள் பெற்றுள்ள ஜோவிகா, வெளியேற்றப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆனாலும் அவர் சீக்ரெட் ரூமில் வைக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிகிறது, நேரலையில் வனிதா பேசும் போது, ஜோவிகா இன்னும் வீட்டுக்கு வரவில்லை, எனக்கு எந்த அழைப்புகளும் வரவில்லை என அவர் கூறியதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
முதல் சீசனில் சுஜா, இரண்டாம் சீசனில் வைஷ்ணவி, மூன்றாம் சீசனில் சேரன் என்று மூன்று முறை மட்டுமே சீக்ரெட் ரூம் பயன்படுத்தப்பட்டது.
தற்போது 7வது சீசனில் ஜோவிகா சீக்ரெட் ரூமில் வைக்கப்பட்டுள்ளார் எனவும் கூறப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |