பிக்பாஸில் கமல் அணிந்த ஆடைகளை டிசைன் செய்தது யார் தெரியுமா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசனுக்கு ஆடையை வடிவமைத்துக் கொடுத்த டிசைனர் சினிமா பிரபலத்தின் மனைவி என்பது தெரியவந்துள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சி பெரியவர் முதல் சிறியவர் அனைவரும் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியாக இருந்தது. 106 நாட்கள் கடந்த கடந்த வாரத்தில் தான் 7வது சீசன் நடந்து முடிந்தது.
என்னதான் வார நாட்களில் சண்டையிடும் போட்டியாளர்கள் வாரத்தின் கடைசி இரண்டு நாட்களில் அடங்கி விடுவார்கள். காரணம் இவர்கள் வார நாட்களில் செய்த தவறை தட்டிக் கேட்க உலக நாயகன் கமல்ஹாசன் வந்துவிடுவார்.
நடிகர் கமல்ஹாசன் வார இறுதியில் உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி பார்க்கும் ரசிகர்களுக்கு சிந்திக்க வைக்கும் கருத்தினை கூறுவார்.
இவர் நிகழ்ச்சிக்கு வரும் பொழுது அதிகமாக கவனிக்கப்படுவது இவரது ஆடை தான். மிகவும் வித்தியாசமாகவும், தமிழ் கலைஞர்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் விதமாகவும் ஆடை அணிந்து வந்திருப்பார்.
ஆதலால் தற்போது இவர் அணிந்து வரும் ஆடையை யார் வடிவமைத்திருப்பார் என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ளது. பிரபல ஆடை வடிவமைப்பாளர் அமிர்தா ராம் தான் டிசைன் செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இவர் பிரபல ஃபாஷன் டிசைனர் ஆவார். தனுஷின் வட சென்னை, ராகவா லாரன்சின் சிவலிங்கா, சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப்பிள்ளை, கமலின் இந்தியன் 2, பிசாசு உள்ளிட்ட படங்களில் உடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.
இது மட்டுமில்லாமல் பிரபல டான்ஸ் மாஸ்டராக ராம்ஜியின் மனைவி என்பது கூடுதல் தகவல். இவரது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |