46 வருடங்களுக்கு பின்னர் திரையில் இணையும் ரஜினி- கமல்: இயக்குநர் இவர் தான்
சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் கமல் தமிழ் சினிமாவில் போட்டியாளர்கள் என்ற ஒரு விம்பம் பொதுவாகவே ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகின்றது.
இந்நிலையில் சுமார் 46 வருடங்களுக்கு பின்னர் திரையை பகிர்ந்துக்கொள்ள போவதாக ஒரு தகவல் வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
1979ல் வந்த நினைத்தாலே இருக்கும் படத்தில் தான் இறுதியான ரஜினி மற்றும் கமல் ஹாசன் இணைந்து நடித்திருந்தனர். அதற்கு பிறகு ஒன்றாக நடிக்கவில்லை.
யார் இயக்குநர்?
இந்நிலையில், கிட்டத்தட்ட 46 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும், கமல்ஹாசணும் இணைந்து நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படம் கமலின் 235வது படமாகவும், 173வது படமாகவும் இருக்கும். லோகேஷ் கனகராஜ் தான் அந்த படத்தை இயக்க போகிறார் என்றும், இதுவும் கேங்ஸ்டர் படமாகவே இருக்கும் என்றும் குறிப்பிடப்படுகின்றது.லோகேஷ் கமல்ஹாசனின் தீவிர ரசிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இறுதியாக ரஜினியை வைத்து லோகேஷ் இயக்கிய கூலி படம் தற்போது திரைக்கு வந்து வெற்றிநடை போட்டு வருகின்றது.
வெறும் 4 நாட்களில் கூலி திரைப்படம் 400 கோடிக்கும் மேல் வசூலித்து, பாக்ஸ் ஆபிசில் சாதனை வசூல் செய்து வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |