தசாவதாரம் படத்தில் கடலில் வீசிய பெருமாள் சிலை....நிஜத்தில் எங்கு இருக்கின்றது தெரியுமா?
உலகநாயகனின் தசாவதாரம் படத்தில் கடலில் வீசிய பெருமாள் சிலை உண்மையில் எங்கு இருக்கின்றது தெரியுமா? இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 2008ஆம் ஆண்டு வெளிவந்த படம் தசாவதாரம்.
இந்த படத்தில் உலகநாயகன் 10 வேடங்களில் நடித்து சாதனை செய்து இருப்பார்.
இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்து வசூலிலும் வேட்டையாடியது. இந்த படத்தில் ஆரம்பத்தில் 12ஆம் நூற்றாண்டில் சோழ அரசன் கோவிந்தராஜர் சிலையை நடுக்கடலில் வீசுவார்.
இறுதியில் சுனாமி போன்ற காட்சியில் கோவிந்தராஜர் சிலை கரை ஒதுங்கி இருக்கும். ஒரு சில காட்சிகள் படத்திற்றாக இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் எடுத்திருப்பதாக அப்போதே தகவல் வெளியாகியிருந்தது.
மாற்றப்பட்ட வரலாற்று உண்மைகள்
படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் சிலை சுனாமியில் கரை ஒதுங்கி இருக்கும். ஆனால், அது உண்மை இல்லை.
சோழ மன்னனால் கடலில் வீசப்பட்ட கோவிந்தராஜர் சிலை வேறு இடத்தில் இப்போது மக்கள் வழிபட்டு வருகிறார்கள். தசாவதாரம் படத்தில் ராமானுஜரின் சீடராக கமல் நடித்து இருப்பார்.
திராட்சையை வருடக்கணக்கில் கெடாமல் வைத்திருக்கும் அதிசயம்....துளியும் ரசாயனம் இல்லை!
அதில் கோவிந்தராஜன் சிலையோடு ஒரு மனிதரை கட்டிப்போட்டு கடலில் வீசப்பட்டது எல்லாம் படத்திற்காக உருவாக்கப்பட்டது. மேலும், குலோத்துங்க சோழன் சொன்ன இடத்தில் தான் பெருமாள் சிலையை கடலில் போட்டார்கள்.
சிலை தற்போது இருக்கும் இடம்
அந்த இடத்தை பார்த்த வைணவ பக்தர்கள் அந்த சிலையை மீட்டு எடுத்தார்கள்.
அதை தில்லைக்கு கொண்டுவராமல் ராமானுஜர் திருப்பதியில் இருப்பதை தெரிந்து பெருமாள் சிலையை திருப்பதிக்கு கொண்டு செல்கிறார்கள்.
ஆனால், அந்த சிலை அடிபட்டு உடைந்து இருப்பதால் சிலைக்கு வழிபாடு செய்யக்கூடாது என்று சொல்லி அந்த நாட்டு மன்னன் உதவியால் ராமானுஜர் கோவிந்தராஜர் சிலையை சுண்ணாம்பு கற்களால் செய்யப்பட்டு திருப்பதியில் வைத்து பிரதிஷ்டை செய்தார்.
பின் கடலில் வீசப்பட்ட அந்த சிலையும் திருப்பதியில் தான் உள்ளது. திருப்பதியில் நரசிம்ம தீர்த்தம் பகுதியில் உள்ள மஞ்சள் நீலா கொண்டா இடத்தில் தெலுங்கில் நல்ல தண்ணி இடத்தில் உள்ளது. பெருமாள் குடியிருக்கும் இந்த நல்ல தண்ணி இடம் எப்போதும் நல்ல தண்ணியால் தான் நிறைந்திருக்கும்.
கோடைகாலத்திலும் வறண்டு போகாமல் இருக்கும்.
அங்கு இருக்கும் மக்கள் இது திருமாலின் மகிமையால் மட்டும் நடக்கும் என்று சொல்வார்கள். அதேபோல் படத்தில் காண்பிக்கப்பட்ட ஸ்ரீதேவி பூதேவி சிலைகள் திருப்பதி பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள ரயில்வே கேட்டை தாண்டி அங்காள பரமேஸ்வரி கோவிலில் வைத்திருக்கிறார்கள்.
