வீட்டில் கடன்தொல்லை, கஷ்டங்கள் நீங்க வேண்டுமா? கல் உப்பை இப்படி பயன்படுத்துங்க
உணவிற்கு பயன்படுத்தப்படும் உப்பைக் கொண்டு கஷ்டங்களை எவ்வாறு நீக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
உப்பு
சமையலுக்கும், உணவைப் பயன்படுத்தப்படும் உப்பு நமது கஷ்டங்களையும் நீக்குகின்றது. பொதுவாக உப்பு உணவில் அதிகமாகிவிட்டாலும் அந்த உணவைக் குப்பையில் தான் கொட்ட வேண்டும்.
அந்த அளவிற்கு அதன் தன்மை காணப்படும். கார உணவுகள் மட்டுமின்றி, இனிப்பு உணவுகளுக்கும் உப்பு முக்கியமாக பயன்படுத்தப்படுகின்றது.
கடலில் இருந்து இயற்கையாக கிடைக்கும் உப்பில் அதிக சத்துக்கள் காணப்பட்டாலும், அவற்றினை அளவாகவே பயன்படுத்த வேண்டும்.
அளவுக்கு அதிகமாக உப்பு பயன்படுத்தினால் உடலில் பல்வேறு பிரச்சனைகளும் ஏற்படுகின்றது. தற்போது வீட்டில் கஷ்டங்கள் போக்க உப்பை நாம் என்ன செய்யலாம் என்பதை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
கஷ்டங்கள் நீங்கும் உப்பு
உப்பை கண்ணாடி ஜாடியில் அல்லது மண் பானையில் வைத்து உபயோகித்தால் வீட்டில் பண கஷ்டம் வராது.
உப்பை யாருக்கும் கடனாக தரக்கூடாது. அப்படி கொடுத்தால் மகாலட்சுமி நம்மிடம் இருந்து சென்றுவிடுவார்.
திருஷ்டி சுத்தும் போது கல் உப்பை உபயோகித்தால் அதை நெருப்பில் போட்டு எரித்தால் கஷ்டங்கள் அனைத்தும் எரிந்துவிடும் அல்லது நீரில் கரைத்தால் கஷ்டங்கள் அனைத்தும் கரைந்துவிடும்.
வீட்டில் தொடர்ந்து கஷ்டங்கள் நிலவி வந்தால் காலை எழுந்தவுடன் ஒரு கண்ணாடி ஜாடியில் உப்பை எடுத்து வைத்து விட்டு அதை மறுநாள் காலை நீரில் கரைத்து செடிகளுக்கு அருகில் ஊற்றவும். கஷ்டங்கள் அனைத்தும் கரைந்துவிடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |