பெயின்ட் ஊற்றிய ஆடையுடன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த பிரபலம்! நெட்டிசன்கள் மூக்கை உடைத்த வடிவமைப்பாளர்
பிக் பாஸ் சீசன் 6 ன் நிகழ்ச்சி தொகுப்பாளாராக இருந்து வரும் கமல் ஹாசனின் இறுதி நாள் நிகழ்ச்சிக்கு அணிந்து வந்த உடை, குறித்து விமர்சகர்கள் மிகவும் கேவலமாக கமண்ட் செய்துள்ளார்கள்.
பிக் பாஸ் சீசன் 6
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதல் இடத்தை அசிமும் இரண்டாம் இடத்தை விக்ரமனும் பிடித்திருந்தார்.
மேலும் இறுதிப்போட்டியில் கமல் அணிந்து வந்த ஆடை சமூக வலைத்தளங்களில் விமர்சகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆடையை பார்க்கும் போது பெயின்ட் பண்ணிக் கொண்டிருக்கும் போது பாதியில் எழுந்து வந்தது போன்று இருந்தது.
இதனை தொடர்ந்து இவர் கடந்த வருடம் நிறைவிற்கு வந்த பிக் பாஸ் சீசன் 4ல் தொகுப்பாளராக இருந்த நடிகர் கமல் அடிக்கடி கதர் ஆடைகளை அணிந்து வருகை தந்திருந்தார். இதனால் ஷோவை பார்க்கும் ரசிகர்களுக்கும் போட்டியாளர்களும் இதனை அடிக்கடி வலியுறுத்திக் கொண்டே இருந்தார்.
கமலின் புதிய நிறுவனம்
இது குறித்து பல இடங்களில் சர்ச்சை கேள்விகள் எழுந்த போது, இது நெசவுத் தொழிலாளகர்களின் நலம் கருதி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்பட செய்யும் நோக்கத்தில் அணிவதாக விளக்கம் கொடுத்துள்ளார். இந்நிலையில் சமிபத்தில் நடிகர் கமல் ‘House Of Khaddar’ என்ற ஒரு ஆடை நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார்.
இந்த நிறுவனத்தில் தயாரிக்கப்படும் ஆடைகளிலிலே கடந்த இரண்டு சீசன்களால் பிக் பாஸிற்கு போட்டுக் கொண்டு வருகிறார். மேலும் கடந்த சீசன்களை விட இந்த சீசனில் கமலின் ஆசைகள் சற்று வித்தியாசமாக இருந்தது. இதனால் அதிகமமாக கேலிக்குள்ளாகி ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகிறார்கள்.
இந்த ஆடைகளில் இந்த சீசன் இறுதி போட்டியில் கமல் அணிந்து வந்த வெள்ளை பெயிண்ட் ஊற்றியது போல இருந்த கரு நீல நிற ஆடை , அதிகமாக நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் கேலிக்குள்ளாகியது.
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த வடிவமைப்பாளர்
இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அந்த நிறுவனத்தில் வேலைச் செய்யும் வடிவமைப்பாளர் அமிர்தா இந்த ஆடை குறித்து விளக்கம் அளித்துள்ளார். இந்த விளக்கத்தில், கமல் சாரின் ஆடைகள் எப்போது நாங்கள் தான் வடிவமைப்போம்.
மேலும் பிக் பாஸ் இறுதிப்போட்டி என்பதால், கமல் சாரின் ஆடையை சற்று வித்தியாசமாக வடிவமைக்க திட்டமிட்டோம். இதனால் தான் இந்த ஆடையை தயாரிப்போம். நான் ஆடையை தயாரித்து கலை இயக்குனர் ஜாக்சனிடம் ஆடையில் பெயிண்ட் செய்ய கொடுத்தேன். இவர் பல படங்களுக்கு ஆடை வடிவமைத்துள்ளாராக பணியாற்றியுள்ளார்.
சுமார் இரண்டு நாட்களில் இந்த வேலை முடித்துக் கொடுத்துள்ளார். இதனை பார்த்த கமல் சாரும் சூட் ஜாப் என பராட்டனார். இந்த ஆடையை தான் நீங்கள் கேலி செய்கீறிர்கள்.
இந்த ஆடை தயாரிப்பு என்பது ஒரு கலை தான். அதற்கான நாங்களும் கஷ்டப்படுகிறோம். இதனை ஒரு ஆடையாக பார்க்காமல் கலையாக பாருங்கள்” என நெட்டிசன்களுக்கு பதிலளிக் கொடுத்துள்ளார்.