அட்லீ மனைவியின் பிறந்த நாளுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் போட்ட பதிவு... இவர்கள் நண்பர்களா?
இயக்குனர் அட்லீயின் மனைவி பிரியாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி நடிகை கீர்த்தி சுரேஸ் வெளியிட்டுள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிரியா அட்லீ
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ தொடரில் நடித்து, ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் தான் பிரியா.இவர் இயக்குனர் அட்லீயை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
கீர்த்தி சுரேஸ் வாழ்த்து
நடிகை கீர்த்தி சுரேஷ், இயக்குநர் அட்லீ, அவரது மனைவி பிரியா உள்ளிட்டவர்கள் நெருங்கிய நட்புடன் பழகி வருகின்றனர்.
கீர்த்தி சுரேஷின் நெருங்கிய தோழியும் அட்லீயின் மனைவியுமான பிரியா கீர்த்தி சுரேஷிற்கு ஹிந்தியில் அறிமுகமாவதற்கு வாய்ப்பு வாங்கி கொடுத்துள்ளார்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆன தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் தான் பேபி ஜான் திரைப்படம். அதில் கீர்த்தி சுரேஷ் தான் ஹீரோயினாக நடித்திருக்கின்றார்.
இவர்கள் மூவரும் அவ்வப்போது இணைந்து பல வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். பல கொண்டாட்டங்களை இவர்கள் இணைந்து கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது பிரியாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி நடிகை கீர்த்தி சுரேஷ் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |