Kala Chana: மாரடைப்பை தடுக்கும் கருப்பு கொண்டைக்கடலை... இவ்வளவு நன்மைகள் இருக்கா?
கருப்பு கொண்டைக்கடலை, பாரம்பரிய உணவுகளில் நீண்ட காலமாக ஒரு முக்கிய உணவாக இருந்து வருகிறது. ஆனால் தற்காலத்தில் இதன் மகத்துவம் குறித்து பெரும்பாலானவர்களுக்கு தெரியாது.
பொதுவாக கருப்பு கொண்டைக்கடலை அதிக நார்ச்சத்து, புரதம் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்ட ஒரு சத்தான உணவுவான அறிப்படுகின்றது.
கருப்பு கொண்டைக்கடலையில் காணப்படும் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் அதன் மருத்துவ குணங்கள் தொடர்பில் விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆரோக்கிய நன்மைகள்
எடையைக் குறைப்பதில் ஆற்றல் காட்டும்: கருப்பு நிறக் கொண்டைக்கடலையில் நார்ச்சத்து செரிந்து காணப்படுவதால், உடல் எடையை குறைப்பதில் பெரிதும் துணைப்புரிகின்றது.
இதனை குறைந்தளவு சாப்பிட்மாலும் வயிறு நிறைவதோடு நீண்ட நேரத்திற்கு பசி இல்லாமல் இருக்கலாம்.
இதயநோயை தடுக்கும்: கருப்பு கொண்டைக்கடலையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ், டெல்டின், ஃபைடோ நியூட்ரியன்ட் போன்றவை அதிகமாக இருப்பதால் ரத்த நாளங்களில் கொழுப்புகள் தங்கி அடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது. மாரடைப்பு பக்கவாதம் போன்றவை வருவதற்கான வாய்ப்பு குறைகிறது. மேலும் இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் ஆற்றல் காட்டுகின்றது.
நீரிழிவுக்கு தீர்வு : இரத்த சர்க்கரையை நிர்வகிப்பதில், உதவுகிறது குறைந்த கிளைசெமிக் குறியீடு மற்றும் அதிகப்படியான நார்ச்சத்து இரத்த சர்க்கரை அளவை மாற்றுவதில் ஆற்றல் காட்டுகின்றது.இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதாக அமைகிறது.
கொலஸ்ட்ரால் குறையும்: கருப்பு நிற கொண்டைக் கடலையில் நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் அவை கொலஸ்டிரால் அளவைக் குறைக்க உதவும். ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். இதில் கிளைசெமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது. இதனால், அதிலுள்ள கார்போஹைடிரேட் உடைந்து மெதுவாக சொரிமானமாகும். இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக பராமரிக்கப்படும்.
மலச்சிக்கலை நீக்கும்: இரவில் ஊற வைத்த கருப்பு கொண்டைக்கடலையை பச்சையாக சாப்பிட்டாலும் அல்லது கடலை ஊறிய நீரை குடித்தாலும் மலச்சிக்கல் நீங்கும். இளம் பருவத்தினருக்கான சத்துக்கள் அனைத்தையும் தந்து உடல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். எலும்புகள், மூட்டுகளை வலுவாக்கி சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: முக்கியமான தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளுடன், காலா சனா நோயெதிர்ப்பு சாதனத்தை பலப்படுத்துகிறது மற்றும் தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கிறது.
குறிப்பாக கறி, சாலடுகள் அல்லது சிற்றுண்டிகளில் கருப்பு கொண்டைக்கடலையை சேர்ப்பது, இயற்கையாகவே ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |